குரு பக்தி: ஆச்சார்யாள் அருளுரை!

Published:

bharathi theerthar
bharathi theerthar

நமக்கு குருபக்தி பரம அவசியம் என்று தனியாக சொல்ல வேண்டியதே இல்லை அந்த குரு பக்திதான் நமக்கு எல்லா விதமான சிரேயஸ்ஸை உண்டாக்கும்.

பரமேஷ்டி குருநாதர் ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் ஓர் இடத்திலே “குருவினுடைய அனுக்ரஹம் இல்லாவிட்டால் உலகத்திலே யாருக்குத்தான் இஷ்டார்த்தங்கள் கிடைக்கும்? ஆகையினால், எல்லா சௌக்கியங்களுக்கும், எல்லா நன்மைகளுக்கும் எல்லா சிரேயஸ்களுக்கும் மூல காரணமான குரு பாதத்தை நீ வழிபடு” என்று உபதேசம் பண்ணினார்.

நமக்கு மஹான்கள் எல்லாம் உபதேசம் பண்ணுவது நாம் நன்றாக இங்கு சிரேயஸ்ஸை அடையவேண்டும் என்பதற்காகத்தான். அவருடைய உபதேசங்களை அனுசரித்து நாம் நடந்தால் நமக்கு நன்மை விளையும். நடக்கவில்லை என்றால் நமக்குத்தான் இழப்பு! அவர்களுக்கு ஒன்றும் போகப்போவது இல்லை!

Related articles

Recent articles

spot_img