அம்பிகையின் மகிமை
நமாமி யாமினீநாத லேகாலங்க்ருதகுந்தலாம் |
பவானீம் பவஸந்தாப நிர்வாபணஸுதாநதீம் ||
பரம்பொருள் நம் துன்பத்தைப் போக்குவதற்காக பெற்ற உருவத்தின் பெயர் என்ன என்கிற கேள்விக்குப் பதிலாக ச்லோகத்தில் ‘பவானீம்’ என்று தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதாவது பெண் வடிவாகிக் காட்சியளிக்கும் பரம்பொருள் இங்கு ‘பவானி’ என்றழைக்கப்பட்டிருக்கிறாள். அவளை வணங்கி நாம் தாபத்திலிருந்து விடுதலை பெற்று அறிவையும், அமைதியையும், இன்பத்தையும் பெறுவது அவசியம் என்பது ச்லோகத்தின் கருத்து.