December 7, 2025, 1:30 PM
28.4 C
Chennai

சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம்! தமிழ் அர்த்ததத்துடன்..!

simavahini 2
simavahini 2

சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம் !

ஸுவக்ஷோஜகும்பாம் ஸுதா பூர்ணகும்பாம்
ப்ரஸாதா வலம்பாம் ப்ரபுண்யா வலம்பாம்
ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதாநோஷ்ட பிம்பாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

நல்ல மார்பகங்களாகிய கும்பமுடையவளும், அம்ருதம் நிரம்பிய கும்பத்தை கையில் உடையவளும், அருளாகிய பிடிப்பு உடையவளும், மிக்க புண்ணியம் வாய்த்தவருக்கே எட்டிப்பிடிக்க முடிந்தவளும், கொடுக்கிறேனே என்ற சொல்லுடன் கூடிய கோவைப் பழ மொத்த உதடு உடையவளுமான எனதன்னை ஸ்ரீசாரதாம்பாளை சேவிக்கிறேன்.

கடாக்ஷே தயார்த்ராம் கரே ஜ்யானமுத்ராம்
கலாபிர்விநித்ராம் கலாபை:ஸுபத்ராம்
புரஸ்த்ரீம் விநித்ராம் புரஸ்துங்கபத்ராம்
பஜேசாரதாம்பாமஜஸ்ரம் மதம்பாம்

கடைக்கண்ணில் கனிவுகொண்டவள், கையில் ஞான முத்திரையும், கலைகளில் விழிப்பும், செயல்பாடுகளில் நல்லவற்றையும் கொண்ட கண்காணிப்புள்ள பதிவ்ரதையாயும், உயரிய நல்லவற்றையே தன் முன்னே காண்பவளாயும் இருக்கிற என தன்னை ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.

லலாமாங்கபாலாம் லஸத்கானலோலாம்
ஸ்வபக்தைகபாலாம் யச:ஸ்ரீகபோலாம்
கரேத்வக்ஷமாலாம் தநத்ப்ரத்னலோலாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

நெற்றியில் சிறந்த திலகம் கொண்டவள், நல்ல கீதத்தில் ஈடுபாடுள்ளவள், தனது அடியார்களைப் காப்பவள், புகழ் அழகுடன் மிளிரும் கன்னங்கள் உள்ளவள். கையில் ஜபமாலை, தெளிவான பழமையில் நேசமும் கொண்டவள், அத்தகைய எனதன்னை ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.

ஸுஸீமந்த வேணீம் த்ருசா நிர்ஜிதைணீம்
ரமத்கீரவாணீம் நமத்வஜ்ரபாணீம்
ஸுதாமந்தராஸ்யாம் முதா சிந்த்ய வேணீம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

நல்ல வகிடும், பின்னலும் கொண்டவள், கண்பார்வை காரணமாக மான்களை விஞ்சியவள், அழகிய கிளிப்பேச்சுள்ளவள். இந்திரன் வணங்க, அம்ருத பாணத்தால் தெளிவு கொள்ளாத முகபாவமுடையவள், கரைபுரண்டோடும் மகிழ்ச்சி கொண்டவள். அத்தகைய ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.

.ஸுசாந்தாம் ஸுதேஹாம் த்ருகந்தே கசாந்தாம்
லஸத்ஸல்லதாங்கீ மனந்தா மசிந்த்யாம்
ஸ்ம்ருதாம் தயஸை:ஸர்க பூர்வதிதாம் தாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

நல்ல அமைதியும், உடல்வாகும் கொண்டவள், கண் முடிகின்ற இடத்தில் கேசம் முடிவதும், கொடி போன்ற அங்கம் அமைந்தும் இருப்பவள். இவ்வளவு என்றோ, இப்படி என்றோ சொல்ல முடியாதவள். முனிவர்கள் தியானம் செய்யப்படுபவள், பிரம்மன் படைப்புக்கு முன்னமே இருப்பவள். அத்தகைய அன்னை சாரதாம்பாளை சேவிக்கிறேன்.

குரங்கே துரங்கே ம்ருகேந்த்ரே ககேந்த்ரே
மராலே மதேபே மஹோக்ஷேsதிரூடாம்
மஹத்யாம் நவம்யாம் ஸதாஸாமரூபாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

மான் மீதும், குதிரை மீதும், சிங்கத்தின் மீதும், கருடன் மீதும், அன்னத்தின் மீதும், யானை மீதும், விருஷபத்தின் மீதும் ஏறப் பயணிப்பவளும் மஹாநவயன்றும் எப்பொழுதும் ஸாம வேத ஸ்வரூபிணியாக இருப்பவளுமான அன்னை சாரதாம்பாளை சேவிக்கிறேன்.

ஜ்வலத்காந்திவஹ்னீம் ஜகன்மோஹனாங்கீம்
பஜே மானசாம்
போஜாசுப்ராந்தப்ருங்கீம்
நிஜஸ்தோத்ரசங்கீதந்ருத்ய
ப்ரபாங்கீம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

அனல்ரூப மானவளாம்
அனைத்துலகும் ஆள்பவளாம்
இதயமெனும் தாமரைமலரில் – அன்னை
வண்டெனவே ரீங்கரிப்பாளாம். அத்தகைய சாரதாம்பாளை எனதன்னையை சேவிக்கிறேன்.

பவாம்போஜநேத்ராஜ ஸம்பூஜ்ய மாநாம்
லஸன்மந்தஹாஸ ப்ரபாவக்த்ர சின்ஹாம்
சலச்சஞ்சலா சாருதாட ங்ககர்ணாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

பிரஹ்ம விஷ்ணு மகேச்வரர்களால் பூஜிக்கப்பட்டவள், அழகிய புன்முறுவலையே முகத்தின் அடையாளமாக உடையவள். அசையும் மின்னலெனத் தோன்றும் காதணி கொண்டவள். அத்தகைய சாரதாம்பாளை எனதன்னையை சேவிக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Entertainment News

Popular Categories