December 5, 2025, 9:36 PM
26.6 C
Chennai

மகான்கள் தரிசனம்: வேடனுக்கு கிடைத்த வாய்ப்பு!

krishnar 3
krishnar 3

தூய பக்தர்களுடைய சத்சங்கத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூலில் பகவான் ஶ்ரீ சைதன்யர் , கீழ்காணும் மிருகாரி என்னும் வேடனின் கதை மூலம் எடுத்துரைத்தார்.

வெகுகாலம் முன்பு வைகுண்டத்தில் இருக்கும் பகவான் ஶ்ரீ நாராயணனை தரிசித்து திரும்பிய தேவரிஷிநாரதர் திரிவேணி செல்லும் பாதையில் அம்புதுளைத்து துடிதுடித்துக்கொண்டு இருந்த ஓர் மானைப் பார்த்தார். அதன் கால்கள் உடைந்திருந்தன.

இன்னும் சற்றுத்தள்ளி அம்பு தாக்கி துடிதுடித்துக்கொண்டிருந்த ஓர் காட்டுப்பன்றி அதன் கால்களும் உடைந்திருந்தன. இன்னும் சற்று தள்ளி இதே நிலையில் ஓர் முயலைப் பார்த்தார் நாரதர் ஸ்ரீமன் நாராயணனின் தூய பக்தனானதால் இப்படி மூன்று ஜீவன்கள் துடிதுடிப்பதை காணசகித்தாரில்லை.
கன்னங்கரேல் என்ற உருவம் கொண்ட கோவைப்பழமாய் கண்கள் சிவந்த வேடன் ஒருவன் மரம் ஒன்றின் பின்னால் ஒளிந்திருப்பதைக் கண்டார். அவன் கண்களில் கொடூரம் மின்னியது. கையில் வில் அம்புடன் மரணதேவன் போல அவன் காட்சி தந்தான். ஈவு இரக்கமில்லாமல் இன்னும் பல மிருகங்களை கொல்ல அவன் விரும்பினான் போலும். அவனை நோக்கி நாரதர் அடியெடுத்து வைக்கையில், மற்ற விலங்குகள் காட்டைவிட்டு பயந்தோடின.

இதைப்பார்த்த வேடன் நாரதரை வசைபாட முனைந்தான். ஆனால் அவரின் தெய்வீக சக்தி முன் அவன் வாயடைத்து நின்றான்.

“ஓ ரிஷியே ஏன் காட்டுப்பாதையை விட்டுவிட்டு என்னிடம் வந்தீர்?” உம்மை பார்தததும் நான் கொல்லவிருந்த பிராணிகள் எல்லாம் பறந்தோடிவிட்டனவே.”

நாரதர் பேசினார்: “என் மனதில் எழுந்த ஐயத்தை போக்கிக் கொள்ளவே இங்கு வந்தேன் இந்த குற்றுயிரும் குலையுயிருமாய் துடித்துக் கொண்டிருக்கும் பிராணிகள் உன்னைச் சேர்ந்தவையா?”

“ஆம் நீங்கள் சொன்னது சரிதான்”

“நீ ஏன் பிராணிகளை ஒரேடியாய் கொல்லாமல் விடுகிறாய்? ஏன் அம்பால் துளைத்து அவைகளை வலியில் துடிக்க வைக்கிறாய்?

“அய்யன்மீர் என்னை எல்லோரும் ம்ருகாரி என்பார்கள் அதாவது பிராணிகளின் எதிரி என்று. கொள்ளலாம். என் தந்தை இவ்வாறு பிராணிகளைக் கொல்லக் கற்றுத் குலையுயிருமாய் வேதனையில் தந்தார். குற்றுயிரும் துடிக்கும் அந்தப் பிராணிகளைப் பார்ப்பதில் எனக்கு அலாதி ஆனந்தம்,”

இதை கேட்ட நாரத முனி மிருகாரியிடம் “உன்னிடம் ஒன்றே ஒன்று மட்டும் கேட்பேன்.” என்றார்.

“நீங்கள் இந்தக் கொல்லப்பட்ட பிராணிகளை எடுத்துச் சொல்லலாம். என்னிடம் அருமையான மான்தோல்களும் புலித்தோல்களும் இருக்கின்றன. நீங்கள் விரும்பினால் ஏதாவது ஒன்று தருவேன்,’ என்றான் மிருகாரி.

“தோல் ஏதும் வேண்டாம். இன்று முதல் பிராணிகளை முழுமையாகக் கொல்; குற்றுயிரும் குலையுயிருமாய் விடாதே”. என்றார் நாரதமுனி

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் முழுமையாய்க் கொல்லாமல் துடிதுடிக்க விடுவதில் தப்பென்ன?”

“பாதி செத்தும் பாதி சாகாமலும் பிராணிகளைத் துடிதுடிக்கவிட்டால் நீ மெனக்கெட்டு அவைகளை வீணாக துயர் அனுபவிக்கச் செய்கிறாய். இதன் பலன் நீ கஷ்டப்படுவாய். உன்தொழில் மிருகங்களை வேட்டையாடுவது. ஒரு சிறு குற்றமே. மிருகங்களை முழுமையாகக் கொல்லாமல் வேதனையில் துடிதுடிக்கச் செய்வதால் நீ பாவம் செய்தவனாகின்றாய். இதன் பலனை நீ அனுபவிக்க வேண்டியிருக்கும். நீ இப்போது கொன்று குவித்த பிராணிகள் உன் அடுத்தப் பிறவியிலும் அடுத்தடுத்த பிறவியிலும் உன்னைக் கொல்லும்’

நாரதர் என்ற மாபக்தனின் சதசங்கத்தால் தூய்மையடைந்து தன் வேடன் பாவ வாழ்க்கையை எண்ணி வருந்தினான். பாலவிளைவுகளை எண்ணிப் பயந்த வேடன் தான் சிறு வயதில் கற்ற வேட்டையாடும் தொழிலின் தீமைகளை இப்போதுதான் உணர்ந்ததாக தேவரிஷியின் பாதத்தில் தஞ்சமடைந்து அபயம் வேண்டினான்.

“நான் சொல்வதை நீ கேட்டால் முக்தியடைவதற்கான வழியைச் சொல்வேன்” என்றார் தேவரிஷி நாரதர்.

“நீங்கள் எது சொன்னாலும் கேட்கிறேன் ஐயா” என்றான் மிருகாரி.

“முதலில் வில்லை உடைத்தெறி, பிறகு என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறேன்.”

“வில்லை உடைத்தால் பிழைப்புக்கு என்ன செய்வேன்?”

“கவலைப்படாதே. தினமும் உனக்கு உணவு அளிக்கிறேன்.”

இந்த உத்தரவாதத்தைப்பெற்றுக் கொண்ட பிறகு வேடன் வில்லை உடைத்தான். தேவரிஷியின் பாதத்தில் விழுந்தான். அவனை தொட்டு எழுப்பி ஆன்மீக முன்னேற்றத்துக்காக உபதேசம் செய்தார் நாரதர்.

“வீடு திரும்பிச் செல்; கையிலுள்ள செல்வம் எல்லாவற்றையும் மெய்ப்பொருளை உணர்ந்த பிராமணர்களுக்கு தானம் கொடுத்துவிடு. பிறகு நீயும் மனைவியும் வீட்டைவிட்டு வெளியேறி ஒரே ஒரு துணியை மட்டும் எடுத்துக் கொண்டு நதிக்கரைக்குப்போகவும். அங்கு சிறு குடில் எழுப்பி மேடை ஒன்றின் மேல் துளசிச் செடி வளர்க்கவும் தினமும் துளசிதேவியை வணங்கி அவளைச் சுற்றி வலம் வந்து ஹரே கிருஷ்ணா மகாமந்திரத்தை ஓதவும். தினமும் துளசிச்செடிக்கு தண்ணீர் ஊற்றவும். உங்கள் இருவருக்கும் தேவைக்கும் அதிகமாகவே உணவு அனுப்பிவைக்கிறேன். கணவனும் மனைவியும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்.”

தன் தபோ வலிமையால் அந்த மூன்று பிராணிகளையும் நாரதர் இயல்பு நிலைக்கு மாற்றினார். அடிபட்ட பிராணிகள் எழுந்து துள்ளிக் குதித்து ஒடுவதைப் பார்த்த மருகாரி வியப்படைந்தான் பின்னர் வேடன் நாரதருக்கு வணக்கம் செலுத்தி தான் போக வேண்டிய இடத்திற்குச் சென்றான்.

எப்படி வேடன் பெரும் வைஷ்ணவனானான் என்ற செய்தி கேட்ட கிராம மக்கள் அவனை மரியாதை நிமித்தம் காணவந்து யாசகம் அளித்தார்கள் தினமும் வேடனுக்கும் அவன் மனைவிக்கும் பத்து இருபது இருப்பினும் உண்டார்கள், பேர் சாப்பிடக்கூடிய அளவுக்கு உணவு கிடைத்தது. எவ்வளவு தேவையோ அவ்வளவையே இருவரும் உண்டார்கள்.

ஒரு நாள் தன் தோழன் பர்வத முனியுடன் நாரதர் பேசிக் கொண்டிருக்கையில் தன் தோழனை முன்பு ஒரு காலத்தில் வேடனாகவிருந்த தன் சீடனைக் காணுமாறு அழைத்தார். மிருகாரியின் குடில் நோக்கி வந்த இந்த இரு சீலர்களையும் தொலைவிலிருந்து பார்த்தவன் தன் குருவை நோக்கி ஓடோடி வந்தான். தரையில் எறும்புக் கூட்டம் ஊர்ந்து செல்வதைப் பார்த்த வேடன் தன் துணியால் அவற்றை வீசி விலக்கி தரையில் தடாரென்று விழுந்தான்.
“எனதருமை வேடனே. நீ செய்தது ஆச்சர்யமேயல்ல. கடவுள் தொண்டில் என்றென்றும் ஈடுபட்டிருப்பவன் கொல்லாமைச் செம்மலாகி பிறருக்கு ஊறுவிளைவிக்காதவனாகிறான்” என்றார் நாரதர்.

கோரைப்பாய் ஒன்றை தரையில் விரித்து தவச்சீலர்கள் இருவரையும் அதில் அமரச் சொன்னான் வேடன். பிறகு தண்ணீர் கொண்டு வந்து இருவரின் பாதங்களையும் கழுவி அலம்பி அந்த நீரை தானும் பருகி தன் மனைவியையும் பருகச் செய்து தலையில் மீதி நீரை இருவரும் தெளித்துக்கொண்டார்கள்.

இதன் பின்னர் மருகாரி ஹரே கிருஷ்ண மகாமந்திரத்தை உச்சரிக்கத் தொடங்குகையில் உடல் நடுங்கி கண்ணில் நீர் பனித்தது. குதித்துப்பாடி ஆடியவன் தன் மேல் துண்டை அசைத்து ஆடினான்.

ஓ நாரதரே, நீர் சரியான மந்திரக்காரன் தான். உம் கருணையால் நீசன் கூட கிருஷ்ண பக்தனாகலாம்” என்றார் பர்வத முனி.

“என் பிரிய வைஷ்ணவனே, உனக்கு போதிய உணவு கிடைக்கின்றதா” என்று நாரதர் கேட்டார்.

“என் ஆன்மீக ஆசானே. நீங்கள் என்னைப் பார்க்க யாரை அனுப்பினாலும் அவர்கள் ஏதாவது கொண்டு வருகிறார்கள். அவ்வளவு உணவு கொடுக்காதீர். இரண்டு பேருக்கு போதுமானது கிடைத்தால் மட்டும் போதும்.”

வேட தம்பதியரை வாழ்த்திவிட்டு இருவரும் அங்கிருந்து மறைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories