சிப்பிக்கு பொம்மை.. சீரிய சிந்தனை!

Published:

bro sis
bro sis

ஆறு வயது சிறுவன் சரவணன் தன் நான்கு வயது தங்கை சுமதியை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.

ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தன் தங்கை சுமதியை பார்த்து, “எந்த பொம்மை வேண்டும்?” என்றான்.

அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் சரவணன் கடையின் முதலாளியை பார்த்து… ”அந்த பொம்மை என்ன விலை?” என்று கேட்டான்.

அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி சுந்தரம், ”உன்னிடம் எவ்வளவு உள்ளது?” என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன்…. தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்!

”அய்யா….இது போதுமா…?” என்று கவலையுடன் கேட்டான்.

doll shop
doll shop

அதற்கு அந்த கடைக்கார
முதலாளி அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே…., “எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!” என்று மீதியை கொடுத்தார்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

சிறுவன் சரவணன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்…. தன் தங்கை சுமதியோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான்.

இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள்…. முதலாளியிடம்,

“அய்யா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே….” என்றான்.

அதற்கு அந்த முதலாளி,
‘அந்த சிறுவனுக்கு, ‘பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்’ என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை.

நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் ‘பணம்தான் உயர்ந்தது’ என்ற மாற்றம் வந்து விடும்… அதை தடுத்து விட்டேன்.

மேலும், ‘தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர முடியும்’ என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன்.

என்றோ ஒரு நாள்… அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில், ‘இந்த உலகம் நல்லவர்களால் ஆனது!’ என்ற நல்ல எண்ணம் மட்டுமே அவன் மனதில் தோன்றும்.

ஆகையால், அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். இந்த உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டுமே தவிர பணத்தாலோ அல்லது அதிகாரத்தாலோ அல்ல” என்றார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
Oyster
Oyster

அதனால்தான் ஸ்ரீமந் நாராயணன் ஒவ்வொரு உயிர்களிடமும் அன்பை கொட்டிக் கொடுத்து உள்ளான் என்றார்! ஒவ்வொரு வேளை உணவிற்கும் பகவான் எங்கோ ஒரு ஏற்பாடு செய்து உள்ளான். நம்முடைய ஒவ்வொரு தேவையும் பரந்தமானுக்கு தெரியும் என்பதை உணர்ந்தாலே நாம் பிறந்த பிறவியின் நோக்கம் விளங்கும்..

நம்மிடம் எது இல்லையோ (பணம்/வீடு/சொத்து/சொந்தம்/குழந்தை) என்பதை தான் பார்க்கிறோமே தவிர நம்மிடம்/ நம்மை சுற்றி உள்ள காற்று, நீர், நல்ல உடம்பு, அறிவாற்றல், உழைக்கும் திறன் என எல்லாம் மறந்து விடுகிறோம்

அன்பு” என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் ஒவ்வொரு உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறது…அன்பை கொட்டிக் கொடுத்து ஒவ்வொரு கணமும் ரசித்து கொண்டு இருக்கிறான் ஸ்ரீமந் நாராயணன்

Related articles

Recent articles

spot_img