பாபத்தை எரிக்கும் நெருப்பு: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
sringeri abhinava vidyatheertha swami - 2026

எப்பேற்பட்ட தீயவராக இருந்தாலும், பகவான் நாமா (பெயர்) நம்மைக் காப்பாற்றிவிடும். நெருப்பு என்று தெரிந்து கையை வைத்தாலும் தெரியாமல் கையை வைத்தாலும், நெருப்பு கையை எரித்துவிடத்தான் செய்யும்.

அக்கினியின் இயற்கை என்னவென்றால், எந்தப் பொருள் அதனருகில் வருமோ அதைச் சுட்டுவிடும். அதே போல் பகவான் நாமாவின் சுபாவமென்னவென்றால், எவர் பகவானின் நாமத்தைச் சொல்வாரோ, அவருடைய பாபத்தை அந்த நாமா நாசம் செய்துவிடும்.

ஆதலால் நாம் எந்தக் காரியத்தை எப்போது செய்துகொண்டிருந்தாலும் மனதால் மட்டும் பகவான் நாமாவை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் நம் பாபம் கழிந்துவிடும்.

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.