வாக்கியப் பஞ்சாங்கப்படி இன்று துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார் குரு பகவான். நவகிரகங்களில் சுப கிரகம் என்று போற்றப் படும் குரு பகவானின் பெயர்ச்சி, வருடந்தோறும் வருவது. அந்நாட்களில் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இன்று குரு பெயர்ச்சியை ஒட்டி சிவாலயங்களில் சிவபெருமான் சந்நிதியில் கோஷ்டத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி திருமேனிகளுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
நவக்கிரங்களில் சுப கிரகம், புத்திர காரகன், தன காரகனாகவும் விளங்குகிறார். வாழ்வில் வளமும் நலமும் பெற குருபகவானின் அருள்பார்வை அவசியம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்ல ஒரு வருடம் ஆகும். இந்த வருடம், குரு பகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று இரவு 10.05 முதல் இடம் பெயர்கிறார்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் அக்.11 ஆம் தேதி குரு பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு சிவாலயங்கள், குரு பரிகாரத் தலங்களில் யாகங்களும் பரிகார பூஜைகளும் நடைபெறுகின்றன.
பன்னிரண்டு ராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்ள… குரு பெயர்ச்சி பலன்கள் 2018




