குரு பெயர்ச்சி பலன்கள் 2018: பொது தகவல்கள்!

பொதுவாக இந்த குரு பெயர்ச்சி ப்ரச்னப்படி தமிழகத்தில் நல்ல மாறுதல்களையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும்; மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கொண்டு ஆட்சி செய்வோர்க்கு சில விஷயங்களில் சஞ்சலம் இருந்தாலும் உடன் தீர்ந்து விடும்படியாக அமையும்

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார். குரு பார்க்க கோடி நன்மை என்ற வாக்கு சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம். இதோ இந்த குரு பெயர்ச்சி நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி. இணையங்களில் மட்டுமல்லாமல், பல்வேறு இதழ்களில் ஜோதிடக் கட்டுரைகள், ராசி பலன்கள், ஜோதிடக் குறிப்புகள் இவற்றை எழுதியுள்ளார். இவரது துல்லியமான பொதுப் பலன்கள் பலரது நம்பிக்கையையும் பாராட்டையும் பெற்றவை! நம் தினசரி இணைய வாசகர்களுக்காக ஜோதிடர் கணித்துத் தந்த பலன்கள்…

– ஆசிரியர்


 


குரு பெயர்ச்சி பலன்கள் – 2018-19 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM


ஜெய் ஸ்ரீமன் நாராயணா!  வாக்ய பஞ்சாங்கப்படி, வருகிற 04.10.2018 அன்று இரவு 9.38 மணிக்கு , குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 04.102018 முதல் 29.10.2019 வரை விருச்சிகத்தில் சஞ்சரிக்கிறார். 13.03.19 முதல் அதிசாரமாக தனூர் ராசியில் சஞ்சரிக்கிறார். பின் ஏப்ரல் 10ம் தேதி வக்ரமாகிறார். ஏப்ரல் 25ம் தேதி வக்ரமாக விருச்சிக ராசியில் ப்ரவேசிக்கிறார். ஆகஸ்ட் 11ல் வக்ர நிவர்த்தியாகி அக்டோபர் 29 முடிய விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார்.

இந்தக் காலகட்டத்திற்கான (04.10.18 முதல் 29.10.2019 வரை) குரு பெயர்ச்சி  பலன்கள்:

கிரக நிலைகள் 04.10.18 அன்று…

லக்னம்
சந்திரன், ராகு
கேது, செவ்வாய்
சனிகுருசுக்ரன்,புதன்சூரியன்

 

விருச்சிக ராசிக்குப் பெயரும் குரு பகவான் அங்கிருந்தபடி மீனம், ரிஷபம் மற்றும் கடகம் ஆகிய ராசிகளை முறையே 5,7,9 பார்வையாக பார்க்கிறார்.

மீனம் மற்றும் கடகம் ஆகிய ராசிகளுக்கு மிக யோகமாயும், ரிஷபம், துலாம், மகரம் ஆகியவற்றுக்கு ஓரளவு நல்ல பலன்களாகவும் அமைந்துள்ளது இந்த குரு பெயர்ச்சி; மற்ற ராசிகளுக்கு அவ்வளவு நல்ல பலன்கள் இல்லை. தனிப்பட்ட ஜாதகத்தில் குரு நன்றாக இருந்தால் மேற்படி விஷயங்கள் நன்றாக இருக்கும்.

பொதுவாக இந்த குரு பெயர்ச்சி ப்ரச்னப்படி தமிழகத்தில் நல்ல மாறுதல்களையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும்; மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கொண்டு ஆட்சி செய்வோர்க்கு சில விஷயங்களில் சஞ்சலம் இருந்தாலும் உடன் தீர்ந்து விடும்படியாக அமையும்

மழை பெருகி விளைச்சல் கூடி விலைவாசி கட்டுப்படும். நெல், காய்கறிகள் எண்ணை விலை குறைவாக இருக்கும்; பருப்பு விலைகளும் குறையும். வாகன வகையில் விற்பனை அதிகரிக்கும், மக்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும், வேதம் வளரும் தெய்வ பக்தி கூடும். கோவில்களில் கூட்டம் அதிகரிக்கும். தீய சக்திகள் விலகும். மொத்தத்தில் தமிழகம் நல்ல முன்னேற்ற பாதையில் செல்லும்.

குறிப்பு :-

இங்கே கொடுக்கப் படும் 12 ராசிகளுக்குமாக பலன்கள் பொதுவானவை. அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை அருகில் இருக்கும் ஜோதிடரிடம் காட்டி குருவின் நிலை, சனி, ராகு, கேதுக்களின் நிலையையும் அறிந்து உங்கள் சரியான பலன்களை பெறுவதே உத்தமம் ஆகும்.

மேலும் பரிகாரம் என்பது பிரம்மாண்டமாகப் பூஜைகள் ஹோமங்கள் செய்வது, க்ஷேத்திராடனம் என புனித தல யாத்திரை செல்வது மட்டுமே என்று எண்ண வேண்டாம்.

தங்களால் முடிந்த அளவு அன்னதானம் வஸ்திர தானம், ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி தானம், வறிய பெண்களுக்கு மாங்கல்ய தானம், முதியோர்களுக்கு சரீர ஒத்தாசை ஆகியவற்றைச் செய்தலும் நற்பலன் தருபவையே.

சர்வே ஜனோ சுகினோ பவந்து: எல்லோரும் இன்புற்றிருக்க இறையருள் கைகூடட்டும்!

குரு பெயர்ச்சி 2018 -19

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 குரு பெயர்ச்சி பலன்கள் 2018, குரு, தட்சிணாமூர்த்தி, குரு பார்க்க கோடி நன்மை, பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள், ராசி பலன், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்,

குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: மீனம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, மீன ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: கும்பம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, கும்ப ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: மகரம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, மகர ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: தனுசு

இதோ இந்த குரு பெயர்ச்சி, தனுசு ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: விருச்சிகம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, விருச்சிக ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: துலாம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, துலா ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: கன்னி

இதோ இந்த குரு பெயர்ச்சி, சிம்ம ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: சிம்மம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, சிம்ம ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: கடகம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, கடக ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: மிதுனம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, மிதுன ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: ரிஷபம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, ரிஷப ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: மேஷம்

நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம். இதோ இந்த குரு பெயர்ச்சி மேஷ ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...