December 5, 2025, 6:09 PM
26.7 C
Chennai

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்..

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது

நேற்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் தங்கி அருள்பாலித்தார்‌. இன்று காலை 6 மணிக்கு கள்ளழகருக்கு திருமஞ்சனம், சைத்தியோபசாரம், ஏகாந்த சேவை நடந்தது. சேஷ வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோலத்தில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பாடான கள்ளழகர், வைகை ஆற்றில் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்‌. பிற்பகலில் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்த நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தவளையாக இருந்த தபசு முனிவருக்கு சாபவிமோசனம் அளித்ததை சுட்டிக்காட்டும் வகையில், முனிவரின் உருவ சிலை அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அவர் சாப விமோசனம் பெற்றதை விளக்க, நாரை பறக்கவிடப் பட்டது. அதைக் கண்டு பக்தர்கள் தரிசித்தனர்.

மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கியது குறித்த மிக சுவாரஸ்யமான தாகும்.

மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண மட்டும் இங்கு வருவதில்லை. மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காகவும் வருகிறார். அழகர்மலை உச்சியில் என்றும் தண்ணீர் வற்றாத நூபுர கங்கை உள்ளது. அங்கு ஒருநாள் சுதபஸ் என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கி நீராடியபடி மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்தார். அப்போது துர்வாச முனிவர் தனது சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வந்தார். அவரை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. குளித்து முடித்து பூஜைகளை செய்த பின் நேரம் கடந்து வந்து துர்வாச முனிவரை வரவேற்றார். அதனால் துர்வாச முனிவர் கோபமடைந்து சுதபஸ் முனிவரை பார்த்து மண்டூகம் (தவளை) ஆகும்படி சாபம் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுதபஸ் முனிவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். உடனே துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமி தினத்துக்கு மறுநாள் வரும் கிருஷ்ணபட்ஷ பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகராக வந்து சாப விமோசனம் அளிப்பார் என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். சாபத்தினால் தவளையாக மாறிய சுதபஸ் முனிவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து தவமிருந்தார். தவத்தினால் மனம் இறங்கிய சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரை வந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கியதாக வரலாறு கூறுகிறது.

இந்த சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி இன்று நடந்த நிகழ்ச்சியில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளித்தார். இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அழகர் அனுமார் கோவிலில் கள்ளழகராக எழுந்தருளினார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடந்தது.

இரவில் விடிய, விடிய நடைபெறும் தசாவதார காட்சியை காணவும் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ளனர். முத்தங்கி, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் உள்பட பல்வேறு அவதாரங்களில் கள்ளழகரை தரிசிக்கலாம் என்பதால் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

202204171222528115 Kallalagar set out to absolve Sage Manduka from the curse SECVPF 1 - 2025
IMG 20220417 WA0101 - 2025
alagar 1 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories