
கோட்டட் பிரெட்
தேவையான பொருட்கள்:
பிரெட் ஸ்லைஸ் – 6
கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 8 (பொடியாக நறுக்கவும்)
வெண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பிரெட், வெண்ணெய் தவிர மற்ற பொருள்களை ஒன்றுசேர்த்து தண்ணீர்விட்டு தோசை மாவுப் பதத்தில் கரைத்துக்கொள்ளவும். பிரெட் ஸ்லைஸை ரோஸ்ட் செய்து இந்த கலவையை இரு பக்கமும் தடவவும். தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி ரோஸ்ட் செய்து எடுக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால் சீஸ் துருவல் தூவி சாப்பிடலாம்.





