கேள்வி:- சிவன் கோவிலுக்குச் சென்றால் நந்தி மூலம் சிவனைப் பார்க்க வேண்டும் என்பார்கள். அதன் வழிமுறை என்ன? அப்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் என்ன?
பதில்:- நந்தீஸ்வரனின் கொம்புகளின் மீது இடது கையை வைத்து நந்தியின் பின் பாகத்தை வலது கையால் தொடுவதன் மூலம் நந்தி தலையைக் குனிவார். அப்போது கொம்புகளின் மத்தியிலிருந்து சிவனைப் பார்க்க வேண்டும். பசுபதியான சிவன், பசுக்களான ஜீவர்களுக்குத் தலைவன். அந்த பசுத் தன்மையைத் தாண்டி சிவனை தரிசிக்க வேண்டும்.
மற்றொரு பொருளில் நந்தி தர்ம சொரூபம். சனாதன தர்மத்தை கௌரவித்து தர்மம் வழியாகவே தெய்வத்தை தரிசிக்க வேண்டுமென்ற சங்கேதம் கூட இதில் மறைந்துள்ளது.
நந்தீஸ்வர! நமஸ்துப்யம் மகாதேவஸ்ய சேவார்தம்
சாந்தானந்த ப்ரதாயக! அனுஜ்ஞசாம் தாது மர்ஹஸி
– என்ற ஸ்லோகத்தைக் கூறி, ‘ஹர ஹர சிவ சிவ’ என்ற சிவ நாமத்தை உச்சரித்து, நந்தியின் கொம்புகளின் மத்தியில் இருந்து சிவ லிங்கத்தை தரிசித்தால் வேதம் படித்த பலன், சப்த கோடி மகா மந்திர ஜப பலன் கிடைக்குமென்றும், பாபங்கள் பரிகாரமாகும் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…
தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)




