திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூர் தமிழர் தெருவில் அமைந்துள்ள ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி விழா நடைபெற்றது .

அதனை முன்னிட்டு மாலை கருடாழ்வாருக்கு கும்ப ஜெபம், அபிசேகம், அலங்காரம் நடைபெற்றது ஆடி மாதம் சுவாதி நாளில் நடைபெறும் கருடாழ்வார் ஜெயந்தியில் நெய் தீபம், எண்ணை தீபம், நீராஞ்சனம் ஏற்றி வழிபட்டால் திருமணம்,குழந்தை பாக்கியம் கிடைக்கும், கடன் பிரச்சனை தீருதல், தொழில், வியாபாரம் செழிக்கும் என்ற ஐதீகம் உள்ளதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கருடாழ்வாரை வழிபாடு செய்தனர் ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாட்சாரியார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி
Popular Categories



