#சந்திரகிரகணத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டது; சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பது இன்று பிற்பகல் 2.30 மணியுடன் நிறுத்தப்பட்டது #Tirupati
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், சந்திரத் தலம் என்று போற்றப் படுவது. ஜாதகத்தில் சந்திரன் பார்வை குறைந்திருந்தால், சந்திர பரிகாரத்துக்காக, திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட அறிவுரை கூறுவார்கள் ஜோதிடர்கள். திருப்பதி கோயிலில் சந்திர கிரகணத்தன்று சாந்தி பரிகாரங்கள் செய்வது வழக்கம். அதை முன்னிட்டு கோயில் நடை முன்னதாகவே அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்வர். அதன்படி, சந்திர கிரகணம் பீடிக்கும் நாளான இன்று பிற்பகல் 2.30 மணியுடன் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது நிறுத்தப் பட்டு, கோயில் நடை சாத்தப் பட்டது.




