கேள்வி:- வீட்டில் பெண்கள்தான் தீபம் ஏற்ற வேண்டுமா? ஆண்கள் ஏற்றக் கூடாதா?
பதில்:- வீட்டில் பொதுவாக பெண்கள் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்காக ஆண்கள் தீபம் ஏற்றக் கூடாது என்று நியமம் எதுவுமில்லை. பெண்கள் வீட்டில் இல்லாத போதோ அல்லது ஆண்கள் தனியாக இருக்கும் போதோ தாராளமாக ஆண்கள் கடவுள் அருகில் தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபடலாம்.
ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…
தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)




