கேள்வி:- அம்பாளின் அஷ்டோத்தர சத நாமாவளியில் ‘பக்த ஹம்ச பரீ முக்ய வியோகாயை நமோ நம:’ என்பது 83வது நாமம். இந்த நாமத்திற்கு பொருள் என்ன? சில புத்தகங்களில் ‘பரீமுக்ய’ என்பதற்கு பதில் ‘பராமுக்ய’ என்று உள்ளது. எது சரியான பாடம்?
பதில்:- ‘பராமுக்ய’ என்பது சரியான பாடம். ‘பராமுக்ய’ என்றால் ‘பாராமுகம்’ அதாவது பார்க்காமலிருப்பது. பக்தர்களான பரம ஹம்சர்கள், யோகிகள் இவர்களை ஜகதம்பாள் கண்டும் காணாமல் பாராமுகமாக இருக்கும் குணத்திலிருந்து பிரிந்திருக்கும் வியோகம் கொண்டவள்.
இந்த நாமத்தை இவ்விதம் கூறுவதில் ஒரு அழகு உள்ளது. அதாவது பாராமுகமாக இருக்க மாட்டாள் என்று பொருள். பக்தர்களான யோகிகளிடம் சுமுகமாக இருப்பவள். அவர்களைக் கருனையுடன் எப்போதும் பார்த்திருப்பவள் என்று பொருள். யோகிகளின் இதயத்தில் அம்பாள் யோகமாகவே திகழ்கிறாள். அங்கு வியோகமே கிடையாது. பக்த வாத்சல்ய ஸ்வரூபிணி, பரம ஹம்சர்களிடம் ஒளிவீசும் ஞானானந்த தத்துவம் அவளே!
ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…
தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)




