கூரத்தாழ்வான் அவதார உத்ஸவம்! அபூர்வமான நாள்; ஆச்சரியமான சேவை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் விழாக்கள் விசேஷங்கள்
koorathazhvan ramanujar ramar - 2026

ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு அவதார உத்ஸவம் 4ம் நாள் திருவாதிரை மற்றும் புனர்பூசம். ஸ்ரீ இராமர் சீதை லக்ஷ்மணனுடன் சிறிய திருவடி, ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீ கூரத்தாழ்வான் சேவை…. | நாள் தை 6 (ஜனவரி 20, 2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்.

கூரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் விளம்பி வருட வார்ஷிக மஹோத்ஸவம் தை ஹஸ்தம் சாற்றுமறையாக பத்து நாட்கள் கொண்டாடபட்டு வருகிறது.

நேற்று நடந்த 4ம் நாள் உத்ஸவத்தில் திருவாதிரை புனர்பூசம் நக்ஷத்திரங்கள் சேர்ந்து வந்ததால் ஒரே சிம்மாசனத்தில் ஸ்ரீ ராமர் சீதை லக்ஷ்மணனுடன் சிறிய திருவடி, ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீ கூரத்தாழ்வான் சேர்த்தியாக எழுந்தருளி திருமஞ்சனம் மற்றும் நாச்சியார் திருமொழி சேவை கண்டருளினார்.

மூவரும் சேர்ந்து ஒரே சிம்மாசனத்தில் சேவை சாதிப்பது மிக அரிதான உத்ஸவம். பல வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். (திருவாதிரை புனர்பூசம் ஒரே நாளில் வந்ததால் இந்த சேவை)

தகவல், படம்: வி.என்.கேசவபாஷ்யம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.