மகான் சேஷாத்திரி சுவாமிகள் (1870-1929) ஜெயந்தி (ஜன.26)

அண்ணாமலையை அழகுபடுத்திய அற்புத மகான் -ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்! அவரது ஜெயந்தி விழா இன்று!

இவர் பாட்டனார் காமகோடி சாஸ்திரிகள் காமாட்சியிடம் நேரடியாக பேசுபவர். அவளை பற்றி #அம்பா சிவே பவதீமுபாசே. என நிறைய ஸ்தோத்திரங்கள் எழுதி உள்ளார்

40 வருடம் அண்ணாமலையை விட்டு விலகாதவர்; அருணாசலரை நிறைய பேருக்கு நேரில் காட்டிய மகான்!

உண்ணாமுலையாளே வந்து அக்னி தீர்த்த கரையில் அமுது கொடுத்த மகான்.

தன்னை ஒரு பக்தர்க்கு மதுராவில் கிருஷ்ணனாகவும் அண்ணாமலையில் பராசக்தியாகவும் பக்தர்க்கு காட்சி கொடுத்த மகான்.

ரமணரை உலகறியச் செய்த மகான்

காஞ்சி பெரியவர் இவரை குருவாக ஏற்ற மகான் அவர் இவரை போல ஆவேனா என மடத்து ஆட்களை பார்த்து அடிக்கடி கேட்பாராம்.

திருவண்ணாமலையில் இருந்தே ஏகாம்பரர் தேரில் ஏறுகிறார் என சொன்ன மகான். பல சித்து வேலை செய்த மகான்; நிறைய அற்புதம் செய்த மகான்.

1000008 தடவை கிரிவலம் வந்த மகான்! ஸ்ரீ வித்யா உபாசகர்கள் பலர்க்கு அம்பா பார்வதியாக காட்சி தந்த மகான். இவரை சோதிக்க நான்கு பேர் நான்கு தெருக்களில் இவரை தேடி போகும் போது ஒரே நேரத்தில் நான்கு பேருக்கும் காட்சி கொடுத்த மகான்.

இவர் நம் கடைக்கு வர மாட்டாரா என ஏங்குபவர் பலருண்டு
இவர் வந்துவிட்டால் போதும் வியாபாரம் படு ஜோர்தான்!

இவர் தெருவில் நடந்து சென்றாள் பார்ப்போருக்கு சாட்ஷாத் அம்பாள் கண்ணுக்கு தெரிவாளாம். அத்வைதம் சைவம் சாக்தம் போன்றவற்றை வேதத்தில் சொல்லியுள்ளதை நிறைய பேருக்கு உபதேசம் செய்த மகான்

  • ராஜா
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...