December 5, 2025, 8:23 PM
26.7 C
Chennai

“கடலுத்தண்ணி மாதிரி கரிச்சுக்கிட்டு இருந்த குட்டைத் தண்ணி இப்போ கல்கண்டு மாதிரி இனிக்குதுங்க!”.- கிராமவாசிகள் பெரியவாளைப் பார்த்து.

“கடலுத்தண்ணி மாதிரி கரிச்சுக்கிட்டு இருந்த குட்டைத் தண்ணி இப்போ கல்கண்டு மாதிரி இனிக்குதுங்க!”.- கிராமவாசிகள் பெரியவாளைப் பார்த்து.

(உப்பு கல்கண்டாய் மாறிய அதிசயமும்……………………………., கிராமவாசிகளின் குதூகலமும்)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி 17352237 1601442589873347 7280143330772355007 n 2 - 2025

ஒரு சமயம் ஆந்திராவுல யாத்திரை பண்ணிண்டு இருந்தார் மகாபெரியவா. அப்போ ஒருநாள் வறட்சியான கிராமம் ஒண்ணுல ராத்திரி தங்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டது. மறுநாள் கார்த்தால நித்ய அனுஷ்டானத்தைப் பண்ணறதுக்கு ஜலம் இல்லாத்தால, எங்கேயாவது குளமோ ஏரியோ இருக்கான்னு பார்த்துண்டு வரச்சொன்னார் ஆசார்யா

கிராமம் முழுக்க சுத்தி வந்ததும் பெரிசா குளம் எதுவும் இல்லை ஒரே ஒரு குளத்துல மட்டும் ஓரமா ஒரு இடத்துல கொஞ்சம்குட்டை மாதிரியான பள்ளத்துல தண்ணி தேங்கி இருந்தது. அதை ஆசார்யாகிட்டே வந்து சொன்னார் ஒரு சிஷ்யர்.

பரவாயில்லை, அங்கேயே ஸ்நானம் பண்ணிக்கலாம்னுட்டு உடனே அந்த இடத்துக்குப் புறப்பட்டுட்டார் பரமாசார்யா.

அதுக்குள்ளே கிராமவாசிகள் சிலர் அங்கே வந்துட்டா.

ஆசார்யாளைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிட்டவா,

” சாமீ…இது ரொம்பவே கலங்கின குட்டைங்க .தண்ணியும்உப்புக் கரிக்கும். நாங்க வேற வழி இல்லாம இதைத்தான் பயன்படுத்தறோம்க. சாமீ கொஞ்ச நேரம் பொறுத்தீங்கன்னா, பத்து மைலுக்கு அந்தப்பக்கம் நல்லதண்ணீர் கிடைக்கும் .எடுத்துக்கிட்டு வந்து தரோம்க. சாமி இதுல குளிக்கவேணாம்க” அப்படின்னு எல்லாருமா சேர்ந்து பரமாசார்யாகிட்டே கேட்டுண்டா,

ஆனா,”தாய்க்கும் தண்ணிக்கும் தோஷம் கிடையாது. நான்இதுலயே ஸ்நானம்பண்ணிக்கிறேன். பரவாயில்லை!”ன்னுட்டு ஆசார்யா அந்தக் குட்டை ஜலத்துலயே ஸ்நானம் செஞ்சுட்டு, அதுக்குப் பக்கத்துலயே உட்கார்ந்து கொஞ்சநேரம் ஜபம்பண்ணினார். தங்கியிருந்த இடத்துக்குப் போய் அங்கேவந்திருந்தவாளுக்கெல்லாம் தரிசனம் தந்து பிரசாதம் குடுத்துட்டு, அங்கே இருந்து யாத்திரியைத் தொடரலாம்னுட்டார்.

அன்னிக்கு ராத்திரி வேற ஒரு ஊர். அதுக்கு அடுத்த நாள் இன்னொரு கிராமம்.இப்படி மூணு நாள் கழிஞ்சு நாலாவது நாள் காலம்பற பலபலன்னு பொழுது விடியற சமயத்துல ஆசார்யா தங்கியிருந்த இடத்தோட வாசல்ல மாட்டு வண்டிகள் ரெண்டு வந்து நின்னுது. அதுலேர்ந்து கிராமவாசிகள் நாலஞ்சுபேர் இறங்கினா.

அவாளைப் பார்த்ததுமே புரிஞ்சுடுத்து, மூணு நாளைக்குமுன்னால பரமாசார்யா தங்கியிருந்தாரே அந்த வறண்ட கிராமத்துலேர்ந்து வந்திருக்காங்கறது. மடத்து சிப்பந்திகளை அவா முதல்லயே பார்த்திருந்ததால் நேரா அவாகிட்டே வந்து, “அய்யா, பெரிய சாமியைப் பார்க்கணுங்க முடியும்களா?” அப்படின்னு கேட்டா .மகாபெரியவாளைத்தான் பெ ரியசாமின்னு அவா சொல்றாங்கறது புரிஞ்சது. உடனே ஆசார்யா இருந்த இடத்துக்கு அழைச்சுன்டு போனா.

பரமாசார்யாளைப் பார்த்ததும்,குலை தள்ளின வாழை மரம்சாயற மாதிரி அப்படியே ‘பொதேர்’னு நெடுஞ்சாண்கிடையா ஆசார்யா கால்ல விழுந்தா அவா அத்தனைபேரும்.

“என்னப்பா என்ன விஷயம்?” பரமாசார்யா பார்வையாலே கேட்டார்.

“சாமீ, நீங்க குளிச்சுட்டு வந்ததுக்கு அப்புறம் அந்தக் குட்டைல ஏதோ மந்திரம் போட்ட மாதிரி ஊத்துக் கண்ணுங்க பெருகி தண்ணீ நிறைய வர ஆரம்பிச்சிடுச்சுங்க. கடலுத்தண்ணி மாதிரி கரிச்சுக்கிட்டு இருந்த குட்டைத்தண்ணி இப்போ கல்கண்டு மாதிரி இனிக்குதுங்க. இனிமே நாங்க குடிக்கத்தண்ணி தேடி எங்கேயும் அலைய வேண்டாம்க. எங்க கஷ்டத்தைத் தீர்த்துவைச்ச சாமிக்கு நன்றி சொல்லிவிட்டு கிராமத்து ஜனங்க சார்பா வெளைஞ்ச பொருட்களை கொஞ்சம் குடுத்துட்டுப் போகலாம்னு வந்தோம்க!”

அவா சொன்னதையெல்லாம் கேட்கக்கேட்க சுத்தி இருந்தவாளுக்கெல்லாம் அதிசயமும்,ஆச்சர்யமுமா இருந்தது.பிரமிப்புல எல்லாரோட கண்ணும் விரிஞ்சுது. ஆனா, எல்லாத்துக்கும் காரணமான மகாபெரியவா, என்னால எதுவும் இல்லை, எல்லாம் ஈஸ்வர க்ருபைனு சொல்றமாதிரி மௌனமா இருந்தார்.

(பின் குறிப்பு)

(ரெண்டு வண்டிகளில் கொண்டு வந்திருந்த அரிசி,பருப்பு காய்கறிகள் -பெரியவாளுக்கு சமர்ப்பித்ததை பெரியவாள் என்ன பண்ணினார்? அது இன்னும் அதி ஸ்வாரஸ்யம், கட்டுரை பிறிதொரு நாளில் வெளிவரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories