December 6, 2025, 2:29 AM
26 C
Chennai

ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு, ஒரு உப்புக்கல் போதும்! ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்!

“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்.”
 
25348822 1793332170711940 70046628756731077 n 1 - 2025
(ஒரு பொய் வழக்கில் வாதாடி ஜெயித்த பணத்தை நிராகரித்த பெரியவா)
 
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
 
பெரியவாள் கலவையில் முகாம்.
 
காலை வேளை, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தரிசனத்துக்கு வந்தார். காரில்.ஏக தடபுடல், மனைவி-மடிசார்., பையன்கள்,வேட்டி-துண்டு, .இவர் பஞ்சகச்சம்-அங்கவஸ்திரம் ,நவரத்தினமாலை இத்யாதி.
 
பெரிய தட்டில்பழங்கள்,புஷ்பம்,கல்கண்டு,திராட்சை, முந்திரிப் பருப்பு,தேன் பாட்டில் அத்துடன் ஒரு காகித உறையில் ரூபாய் நோட்டுகள்.
 
பெரியவாள் முன்னிலையில் சமர்ப்பணம் செய்து, வந்தனம் செய்து கொண்டார்கள்.
 
பெரியவா அந்தத் தட்டை மெதுவாகக் கண்களால் துழாவினார்கள்.
 
“அது என்ன, கவர்?”
 
“ஏதோ…..கொஞ்சம் பணம்…”
 
“கொஞ்சம்னா?…பத்து ரூபாயா, பதினோரு ரூபாயா?”
 
வழக்கறிஞர் நெஞ்சில் ஒரு கர்வம் தோன்றியிருக்கவேண்டும். தன்னைப் பற்றி, மாவட்டத்திலேயே பிரபலமான கிரிமினல் லாயரைப் பற்றி, இவ்வளவு தாழ்வாக எடை போட்டிருக்கிறார்களே பெரியவா? நான் எவ்வளவு பெரிய அட்வகேட் என்று காட்டிக்கொள்ள வேண்டாமா?..
 
பொய்யான பவ்யத்துடன், “பதினைந்தாயிரம் ரூபாய்,” என்றார்.
 
பெரியவா சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டுக் கேட்டார்கள்; ” நீ எதில் வந்திருக்கே?”
 
“காரில் வந்திருக்கோம்…”
 
“அந்தக் கவரை எடுத்துக்கொண்டு போய் காரில் பத்திரமாக வைத்துவிட்டு வா. பழம்,புஷ்பம் போதும்…”
 
அட்வகேட் வெலவெலத்துப் போய் விட்டார்.
 
பெரியவா சொன்னபடியே செய்தார்.
 
அவரிடம் வெகு சாந்தமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, பிரசாதம் கொடுத்து அனுப்பினார்கள்.
 
கார் புறப்பட்டுச் சென்ற சத்தம் கேட்டது.
 
“பதினையாயிரம் ரூபாயை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்களே?” என்ற பொருமல் சிஷ்யர்களுக்கு இருக்கும் என்பது பெரியவாளுக்குத் தெரியாதா என்ன?
 
“ஒரு பொய் வழக்கில் வாதாடி இவர் ஜெயித்தார். கிடைத்த பீஸில்,ஒரு பங்குதான் இந்தப் பதினைந்தாயிரம் . பாப சம்பாத்யம். அதனால் தான் வேண்டாம் என்றேன்…”
 
தொண்டர்களுக்குத் தெளிவு உண்டாயிற்று.
 
ஸ்ரீ மடத்துக்கு, அந்த நாட்களில் அடிக்கடி பொருள் தட்டுப்பாடு வருவதுண்டு. மானேஜர் கவலைப்படுவார், அப்போது கூட, “எப்படியாவது பணம் கிடைத்தால் சரி” என்று எல்லோருடைய பணத்தையும் பெரியவாள் ஏற்றுக் கொண்டதில்லை.
 
“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories