பக்தி இணைய எதுவும் பவித்ரம் தான் !

ஆன்மிகம் உரத்த சிந்தனை

puli satham 2 - 2026சாதத்துடன் பக்தி இணையும்
போது அது பிரசாதமாகி விடும்!

பட்டினியுடன் பக்தி சேரும்
போது அது விரதமாகி விடும்.!

தண்ணீருடன் பக்தி சேரும்
போது அது புனித நீராகி விடும்!

பயணத்துடன் பக்தி சேரும்
போது அது யாத்திரை
ஆகி விடும்.!

இசையுடன் பக்தி சேரும்
போது அது கீர்த்தனையாகி விடும்.!

பக்தியில் ஒரு வீடு திளைக்கும்
போது,
அது கோயிலாகி விடும்.!

செயல்களுடன் பக்தி சேரும்
போது,
அது சேவையாகி விடும்.!

வேலையுடன் பக்தி சேரும்
போது,
அது கர்ம வினையாகி விடும்.!

இல்லறத்தோட பக்தி சேரும்
போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!

ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்.!

மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி விடுகிறான்..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.