December 6, 2025, 1:57 AM
26 C
Chennai

மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?

“மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?”

(பக்தையை வியப்பில் ஆழ்த்தின மகாபெரியவா)

(உலக நாயகியான காமாட்சியையே தன் பக்தைக்காக அனுப்பிய பெரியவரின் மகிமையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை!)

தகவல்-ஜெயலட்சுமி கோபாலன்1610959 931476226925819 8242755971407257102 n 1 - 2025

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-மே 2016 ஞான ஆலயம்

குடும்பத்தினரால் அலமேலு,சேலத்திலிருந்து காஞ்சிபுரம் வந்தார் – மடத்துக் குடியிருப்பு ஒன்றில் தங்கி சமையல் வேலைக்குச் சென்றார். தினமும் காஞ்சிப்பெரியவரைத் தரிசனம் செய்வதைக் கடமையாகக் கொண்டார்.

ஐம்பது வயதில் காஞ்சிபுரம் வந்த அவருக்கு வய்து தற்போது எழுபது ஆனது. அதன் பின் வேலைக்கு செல்ல முடியவில்லை. பக்கத்துத் தெருவில் இருந்த வசந்தாவின் ஆதரவுடன் பொழுதைக் கழித்தார்.

ஒருமுறை வசந்தாவின் தாயார் இறந்து விட்டதால் அவர் திருச்சி செல்ல நேர்ந்தது. இந்த நேரத்தில் அலமேலு பாட்டிக்குக் காய்ச்சல் வந்து விட்டது. பசியால் வாடிய அவர் கவனிப்பார் இன்றி படுக்கையில் கிடந்தார். வாய் மட்டும், “பெரியவா…பெரியவா…” என்று அவரின் திரு நாமத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

திடீரென, “பாட்டி…பாட்டி…” என்று சத்தம் கேட்டது. தட்டுத் தடுமாறி எழுந்த பாட்டி கதவைத் திறந்தார்.

அங்கு வசந்தாவின் மகள் காமாட்சி நின்றாள். கையில் சாப்பாட்டுக் கூடை இருந்தது.

“என்ன பாட்டி,ஒடம்பு தேவலையா?” என்றாள் சிறுமி

தலை அசைத்தாள் பாட்டி. சிரித்தபடியே காமாட்சி, “பாட்டி…இந்தக் கூடையிலே ரசம் சாதம் இருக்கு. சாப்பிட்டு நிம்மதியா இருங்கோ…நான் பாட்டுகிளாஸ்க்குப் போயிட்டு வரேன் என்று சொல்லி ஓடினாள்.

கூடைக்குள் சாதத்துடன்,மிளகு ரசம், சுட்ட அப்பளம், உப்பு,நார்த்தங்காய்,வெந்நீர்,காய்ச்சல் மாத்திரை எனஅனைத்தும் இருந்தன. வசந்தாவின் பாசத்தை எண்ணி நெகிழ்ந்து விட்டார் பாட்டி.

நன்றாகச் சாப்பிட்டு மாத்திரையும் போட்டுக்கொண்டதால் காய்ச்சல் விட்டது.வசந்தாவைப் பார்க்க பாட்டி புறப்பட்டார். வீடு பூட்டி இருந்தது.

“திருச்சியில் இருந்து இன்னும் வசந்தா வரவில்லையே” என்றார் பக்கத்து வீட்டுப் பெண்

பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.’காமாட்சி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாளே! அது எப்படி?’ என்ற கேள்வி மனதில் எழுந்தது.

அந்த சிந்தனையுடன் பாட்டி பெரியவரைத் தரிசிக்கச் சென்றார்.அவரது காலில் விழுந்தார்.

“எப்படி இருக்கேள்….காய்ச்சல் தேவலையா?” என்று கேட்டார் பெரியவர்.

“தான் காய்ச்சலில் அவதிப்பட்டது எப்படித் தெரிந்தது?” என்று புரியாமல் திகைத்தார்.

“மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?” என்று கேட்டு பாட்டியை மேலும் வியப்பில் ஆழ்த்தினார் பெரியவர்.

பாட்டி வாயடைத்து நின்றார்.

சிரித்த பெரியவர், “திருச்சிக்குப் போன காமாட்சி  இன்னும் வரலை…இந்த காஞ்சிபுரத்தை ஆட்சி செய்யுற காமாட்சிதான் உன்னைத் தேடி வந்தா…” என்று கோவில் இருக்கும் திசையைக் காட்டினார்.

அலமேலு பாட்டி அப்படியே சிலையாகிப் போனார். உலக நாயகியான காமாட்சியையே தன் பக்தைக்காக அனுப்பிய பெரியவரின் மகிமையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories