`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர் (stratosphere) தானே” பெரியவா
( விண்வெளியில் உயரே செல்லச் செல்ல, விமானம் எதிர்கொள்ளும் தட்பவெட்ப மாற்றங்களை விவரித்துவிட்டு, குறிப்பிட்ட ஒரு சூழலுக்குச் சென்றதும், விமானத்தின் ஒலி பூமியை அடைவதில்லை) ( ஆங்கிலத்தில் விளக்கினால் பெரியவாளுக்குப் புரியாது என்று நினைத்தோ என்னவோ, சரியாக விளக்க முடியாமல் திணறின இளம் விஞ்ஞானி)

வருடம் 1958. மகா பெரியவா சென்னையில் முகாமிட்டிருந்த நேரம். ஒரு நாள் இரவு, நகர்ப்புற பயணமாக மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.
விமான நிலைய வாயிலில் நின்றிருந்த அதிகாரிகள் வரவேற்க, பெரியவா விமான நிலையத்துக்குள் சென்றார். உடன் வந்த பக்தர்களும் கூடவே சென்றார்கள். சுவாமிகள் விமானத்துக்குள் சென்று பார்க்க ஏற்பாடாயிற்று. “நீங்களெல்லாம் விமானத்துக்குள் வரவேண்டாம்… இங்கேயே இருங்கோ…” என்று பக்தர்களுக்கு உத்தரவு இட்டுவிட்டுச் சென்றார் பெரியவா.
ஆனால், பெரியவா விமானத்துக்குள் இருப்பது போல் படம் எடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வமிகுதியில், கோஷ்டியில் கேமராவும் கையுமாக இருந்த புகைப்படக்காரர், பலர் தடுத்தும் கேட்காமல் சுவாமிகளுக்குப் பின்னால் சென்றார். திரும்பிவரும்போது முகத்தைத் தொங்க விட்டுக்கொண்டு வந்தார்!
நடந்தது இதுதான். பெரியவாளுக்குத் தெரியாமல் விமானத்துக்குள் சென்று, அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்த அவரைப் படமெடுத்திருக்கிறார் புகைப்படக்காரர். ஃப்ளாஷ் வெளிச்சத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பெரியவா, ‘நான் சொன்னதற்குப் பிறகும் நீ ஏன் இங்க வந்தே’ என்பது போல் புகைப்படக்காரரைப் பார்த்திருக்கிறார். புகைப்படக் காரருக்கு சப்தநாடியும் ஒடுங்கிப் போயின!
“ஏர்போர்ட் உள்ளே, அதுவும் விமானத்துக்குள்ளே பர்மிஷன் இல்லாம போட்டோ எடுக்கக் கூடாதுன்னு உனக்குத் தெரியாதா” என்று மகா பெரியவா கேட்டதும் வெலவெலத்துப் போனார் புகைப்படக்காரர். “அப்படி ஒரு சட்டம் இருக்கு இல்லியா” என்று அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு, “என்கூட வந்திருக்கான்னு பேசாம இருந்தேளா…” என்று பெரியவா கேட்டதும், அவர்களும் பதிலேதும் சொல்ல முடியாமல் சங்கடப் பட்டிருக்கிறார்கள். புகைப்படக் காரரைப் பார்த்து, “ரோலைக் கழற்றி இவாகிட்டே கொடுத்துட்டு வா…” என்று சற்றுக் கடுமையாகக் கூறியிருக்கிறார் பெரியவா.
பின்னர், விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, அருகிலுள்ள விமான நிலைய வானிலை ஆய்வுக் கூடத்துக்கு விஜயம் செய்தார் பெரியவா. அங்கிருந்த அதிகாரிகள், அவரவருக்கு உரிய பகுதிக்கு சுவாமிகளை அழைத்துச் சென்று, பல்வேறு நுணுக்கங்களை விளக்கிக் கொண்டிருந்தனர்.
இளமைத் துடிப்புடன் காணப்பட்ட ஒரு விஞ்ஞானி, விண்வெளியில் உயரே செல்லச் செல்ல, விமானம் எதிர்கொள்ளும் தட்பவெட்ப மாற்றங்களை விவரித்துவிட்டு, குறிப்பிட்ட ஒரு சூழலுக்குச் சென்றதும், விமானத்தின் ஒலி பூமியை அடைவதில்லை என்று கூறினார்.
“ஏன் அப்படி” என்று தெரிந்துகொள்ள பெரியவா ஓரிரு கேள்விகள் கேட்க, அதை அறிவுபூர்வமாக ஆங்கிலத்தில் விளக்கினால் பெரியவாளுக்குப் புரியாது என்று நினைத்தோ என்னவோ, சரியாக விளக்க முடியாமல் திணறினார்.
மகா பெரியவா அவரிடம், ‘`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர் (stratosphere) தானே” என்று கேட்க, சட்டென்று முகம் வெளிறிப்போனாராம் அந்த இளம் விஞ்ஞானி



