
செங்கோட்டை இலத்தூர் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து ஆரூத்ரா திருவாசக கமிட்டி சார்பில் 15வது மாதாந்திர ஆரூரதிருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கமிட்டித்தலைவர் தங்கையாமுதலியார் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் பணிநிறைவு சிறப்பு சப்-இன்ஸபெக்டர் முருகன், வீரபுத்திரன், செண்பகம், வள்ளிநாயகம், மாரியப்பன், குருசாமி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
செயலாளர் இராமநாத்(டெயிலர்), அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபஆராதனை நடந்தது. அதனைதொடர்ந்து ஆரூத்ரா திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் சார்பில் பிரேமா தலைமையில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



