29 C
Chennai
27/10/2020 3:01 AM

பஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்  - அக்.27தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...
More

  நாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’! அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்!?

  போலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.

  மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை!

  அக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி

  தமிழகத்தில் 11ஆயிரத்தை நெருங்கிய கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை!

  தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது

  வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்! மருத்துவமனை அறிக்கை வெளியீடு!

  உடல் ஒத்துழைப்பு தருவதை பொறுத்தே அடுத்தகட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

  கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

  அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

  அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

  பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்!

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News

  புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

  ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

  Source: Vellithirai News

  கருடபஞ்சமி நாளில் விரதமிருந்து அவர் அருளைப் பெறுவோம் !

  இந்த நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களைக் கடைப்பிடிப்பதால், குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும், மகிழ்ச்சியும் ஏற்படும்

  nagar
  நாகசதுர்த்தி விரதம் தங்கள் கணவரின் நலனுக்காகவும் பிள்ளைகளின் நலனுக்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். நாகசதுர்த்தி அன்று காலை விரதம் இருந்து, பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றி, துள்ளுமாவு படைத்து கணவர் மற்றும் பிள்ளைகளின் நலனுக்காக வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்வார்கள்.

  ஒரு வீட்டில் 7 சகோதரர்களுக்கு ஒரே ஒரு தங்கை. பெற்றோர் காலமாகிவிட்டதால், சகோதரர்கள்  அந்தத் தங்கையை கண் போல பார்த்துக்கொண்டார்கள். வயலில் வேலை செய்யும் சகோதரர்களுக்கு அவள் தினமும் மதியம் கஞ்சி எடுத்துச் செல்வாள். அன்று கருட பஞ்சமி அது தெரியாமல் அவள் அன்றும் கஞ்சி எடுத்துக்கொண்டு போகும்போது மேலே கருடன் ஒன்று ஒரு பாம்பைக் கவ்விக்கொண்டு போனது. கருடன் வாயில் சிக்கித் தவித்த பாம்பு விஷத்தைக் கக்க அது கஞ்சியில் விழுந்தது.nagar1அதை அறியாமல், அவள் விஷம் விழுந்த கஞ்சியைத் தன் சகோதரர்களுக்குக்  கொடுக்க அவர்கள் அனைவரும் மாண்டுவிட்டனர். அதைக் கண்ட அவள் தானும் அதைக் குடித்து உயிர் விட நினைத்தாள். அப்போது  வயது முதிர்ந்த ஒரு தம்பதியர் அவளைத் தடுத்து கருட பஞ்சமி விரதம் கடைப்பிடிக்கச் செய்து, விரதத்தின் நிறைவில் அட்சதை, புற்றுமண் ஆகியவற்றை உடன்பிறந்தவர்களின் வலது காதில்  வைக்கச் சொல்ல அவளும் அப்படியே செய்தாள். சகோதரர்களும் உயிர் பெற்று எழுந்தனர்.

  நாகசதுர்த்தியன்று நோன்பிருந்து, புற்றுக்கு பால் வார்த்து பின் வீட்டில் 7 முடி போட்ட நோன்புக் கயிறு அணிந்து பூஜை செய்து கணவருக்காக வேண்டிக்கொள்வர். மறுநாளும் புற்றுக்குச் சென்று பால்வார்த்த பின் புற்று மண் எடுத்து வந்து சகோதரரின் வலது காதில் வைப்பார்கள். இதனால் சகோதர ஒற்றுமை உண்டாகும்.

  கணவரின் நலனுக்காகவும், பிள்ளைகளின் நலனுக்காகவும்  நாகசதுர்த்தி அன்றும், சகோதரர்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் தீர்க்காயுளுக்காகவும் கருடபஞ்சமி அன்றும்  விரதம் இருந்து பிரார்த்திப்பார்கள். இன்று காலையில் நோன்பு இருக்க மறந்தவர்கள் மாலையிலாவது அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று அங்கு புற்று இருந்தால் அந்தப் புற்றில் பால் வார்த்து பிரார்த்தித்துக் கொள்ளலாம். புற்று இல்லாத கோயில்களில் அங்கே பிரதிஷ்டை செய்திருக்கும் நாகர் சிலைகளை வழிபட்டு அருள்பெறலாம்.karudanஎன்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம்.

  அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், முக்கியமாக எண்ணெய் கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும். இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும்.

  பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம். அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும் இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.KARUDA PANJAMI e1565000155505இந்த நோன்பு கூடப் பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும். சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.

  கஷ்யப முனிவருக்கு வினதை, கத்ரு என்று இரண்டு மனைவியர். இவர்களில் வினதை கருடனையும், கத்ரு பாம்புகளையும் பெற்றெடுத்தனர். கத்ருவுக்கு வினதையைப் பிடிக்காது. அதனால், அவளை தனக்கு அடிமையாக்க நினைத்து, தந்திரமாக போட்டிக்கு அழைப்பு விடுத்தாள். அக்கா…நமக்குள் ஒரு போட்டி… பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட, உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை என்ன நிறம் தெரியுமா? என்றாள். இதிலென்ன சந்தேகம்; அது வெள்ளை நிறம்… என்றாள் வினதை. இல்லையில்லை,

  அதன் வால் மட்டும் கருப்பு… என்று கத்ரு கூற, வினதை அதை மறுத்தாள். சரி…நாம் ஒரு பந்தயம் கட்டுவோம். யார் சொல்வது தவறோ, அவர் மற்றவர்க்கு அடிமையாக வேண்டும்… என்றாள் கத்ரு. வினதையும் இதற்கு ஒப்புக் கொண்டாள். கத்ரு, ரகசியமாக தன் பாம்பு குழந்தைகளில் கருப்பானவற்றை அழைத்து, நீங்கள் போய் குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுங்கள்… என, உத்தரவு போட்டாள். பாம்புகளும் அவ்வாறே குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டன.

  வினதை, கத்ருவுக்கு அடிமையானாள். இதை அறியாத கருடன், வினதையிடம், அம்மா… நீ, ஏன் சின்னம்மாவுக்கு எடுபிடி வேலை செய்கிறாய்? அவள் எங்கு சென்றாலும், அவள் பல்லக்கை சுமந்து செல்கிறாயே… என்று, வேதனையுடன் கேட்டது. நடந்த விஷயத்தைச் சொன்னாள் வினதை. உடனே கருடன், சின்னம்மா கத்ருவிடம் சென்று,என் தாயை விடுதலை செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டது. கத்ருவோ கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்தாள். கருடா… நீ தேவலோகம் சென்று, இந்திரனிடம் உள்ள அமுதக்கலசத்தைப் பெற்று வந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.karudan 3 1அவ்வாறு செய்தால், உன் அன்னையை விடுவிப்பேன்… என்றாள். கருடன் தேலோகம் சென்று இந்திரனிடம் போரிட்டது. இந்திரனின் பலம் வாய்ந்த வஜ்ராயுதத்தை செயல்பட விடாமல் செய்து, அவனைத் தோற்கடித்தது. இருப்பினும், இந்திரா… இந்த வஜ்ராயுதம் முனிவரின் எலும்பால் ஆனது என்பதை நான் அறிவேன். அதற்கு மதிப்பளித்து, இதை உன்னிடமே திரும்பத் தருகிறேன்.

  அதற்கு பிரதியுபகாரமாக எனக்கு, அமுதம் கொடு. என் தாயை விடுவிக்கவே இதைக் கேட்கிறேன்… என்றது. மகிழ்ந்த இந்திரன், அமுதத்தை கொடுத்தான். அதை கத்ருவிடம் ஒப்படைத்தது கருடன். அப்போது, குதிரையின் வாலில் சுற்றியிருந்த கருப்பு பாம்புகள், அமுதத்தை குடிக்கும் ஆசையில் கீழே இறங்கின. வால் கருப்பாக மாறியதன் ரகசியம் வெளிப்பட்டு விட்டதால் அதிர்ந்தாள் கத்ரு. இருந்தாலும், வினதை அவளை மன்னித்தாள். எதிரிக்கும் அன்பு செய்த வினதைக்கும், கருடனுக்கும் திருமால் காட்சி தந்து, தாயைக் காத்த தனயனை, தன் வாகனமாக ஏற்றார்.karudan 1எம்பெருமானுக்கு வாகனமாக இருக்கும் பட்சி ராஜனாகிய கருடனைப் பற்றி வேதாந்த தேசிகர் அருளியது இந்த ஸ்தோத்திரம்.

  கருட பகவானே! வேதம் படித்த பெரியோர்கள் உம்மை இடைவிடாமல் துதிக்கின்றனர். உம்முடைய சிறகுகளில் இருந்து மிகவும் வலிமையாக காற்று வீசுகிறது. அந்தக் காற்றினால் கடல்கள் கரையை மீறிப் பொங்குகின்றன. அப்போது எழும்பும் அலைகள் பாதாள லோகம் வரையில் பாய்கின்றன. அந்தப் பாய்ச்சல் காற்றோடு கலந்த மிகவும் விசையோடு பாம் என்ற பேரொலியை எழுப்புகின்றன. அந்த சத்தத்தைக் கேட்டதும் பூமியைத் தாங்கும் திக்கஜங்கள் தங்களுடன் யாரோ போருக்கு வருவதாக நினைத்து கோபத்தோடு எதிர்த்து வருகின்றன. அந்த நேரத்தில் உம்முடைய நாகங்கள் என்ற ஆயுதத்தைக் கொண்டு திக்கஜங்களை அடக்கி விடுகிறீர்.

  கருட பகவானே உம்முடைய கூர்மையான வளைந்த அலகு எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. நீர் உமது புருவங்களை நெறிக்கும்போது பாம்பு நெளிவதைப் போல அச்சமேற்படுகிறது. உம்முடைய கோரைப்பற்களைக் காணும் எதிர்கள் இவை தேவேந்திரனின் வஜ்ராயுதமோ என்று கதி கலங்கிப் பின் வாங்குகிறார்கள். இத்தகைய பெருமைகள் கொண்ட உம்மை அடியேன் போற்றுகிறேன். வேதாந்த வித்தைகள் அடியேனுக்கு வசமாகும்படியாக அருள் செய்ய வேண்டும். மேலும் எப்போதும் உமக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் தவறாமல் அடியேனுக்கு தந்தருள வேண்டும் என்கிறார் தேசிகர்.

  இந்த கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் தொல்லை ஒழிந்து போகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஐந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்று பெரியோர் கூறுவர்.

  அவரை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வளம் கொழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திரஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனம் கனிந்து வழிபடுவதன் மூலமாகப் பெறமுடியும் என்று பத்ம புராணம் கூறுகிறது. எம்பெருமான் பள்ளி கொள்ளும் ஆதி சேஷனையும், அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் சிந்தித்து நல்ல வாழ்வு பெறுவோம்.
  இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

  இந்த நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களைக் கடைப்பிடிப்பதால், குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும், மகிழ்ச்சியும் ஏற்படும்

  விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.

  Latest Posts

  பஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

  இன்றைய பஞ்சாங்கம்  - அக்.27தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...

  நாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’! அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்!?

  போலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.

  மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை!

  அக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி

  தமிழகத்தில் 11ஆயிரத்தை நெருங்கிய கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை!

  தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  72FollowersFollow
  958FollowersFollow
  17,300SubscribersSubscribe

  நாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’! அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்!?

  போலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.

  தமிழகத்தில் 11ஆயிரத்தை நெருங்கிய கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை!

  தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது

  வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்! மருத்துவமனை அறிக்கை வெளியீடு!

  உடல் ஒத்துழைப்பு தருவதை பொறுத்தே அடுத்தகட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

  மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை!

  அக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி

  பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை!

  பாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி...

  முக கவசம், சமூக இடைவெளி… விளக்கு பூஜை நடத்திய கிராமத்தினர்!

  அதேபோன்று விளக்குப் பூஜையில் கலந்து கொள்ளக்கூடிய அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது

  தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

  ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.

  ஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்!

  மதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை!

  அதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.
  Translate »