” தண்டனிடுவதன் தத்வார்த்தம் ”
நீங்கள் செய்யும் நமஸ்காரத்தையும் “தண்டாகார நமஸ்காரம்”, “தண்டனிடுவது” என்றுதான் சொல்ல வேண்டும் என்றாலும் , அங்கே அர்த்தமே வேறே.
கழியை நிறுத்திப் பிடித்தால் அது துளிக்கூட குழைவு இல்லாமல் அப்படியே நிற்கிறது. பிடியை விட்ட தண்டம், விழுகிறாற்போல பூமியோடு பூமி நமஸ்கரித்துக் கிடப்பது.
“தண்டாகார நமஸ்காரம்” என்ற பெயர் இதனால்தான். இந்த தாத்பர்யத்தைப் புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால், அந்த நமஸ்காரமே தண்டம்தான்.
சரீரத்தைத் தப்பு வழிகளில் ஆட்டி வைத்ததற்கு பிராயச்சித்தமாக அந்த சரீரத்தையே அவன் முன்னே “தண்டம்” மாதிரி விழப் பண்ணி அதற்குப் புண்ணியம் சேர்த்துக் கொடுக்கிறது ; தானும் புண்ணியம் சம்பாதித்துக் கொள்கிறது.
—ஶ்ரீகாஞ்சி மஹாப் பெரியவர் வாக்கு :
ஆதாரம் : தெய்வத்தின் குரல்,
பாகம்—7, பக்கம்—918 to 921