December 5, 2025, 4:44 PM
27.9 C
Chennai

ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே-அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ ஐயங்கார்-(இன்று தீக்ஷிதர் பிறந்த நாள்-08-04-2019)

“என் தர்பார்ல கல்லும் முள்ளுந்தான்! பக்கவாத்யம் இல்லாம, தம்பூர் கூட இல்லாம வந்திருக்கே! எத்தனை ஸ்ரமமானாலும் ஸஹிச்சிண்டு, எனக்காக கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு!..”

ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே-அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ ஐயங்கார்-(இன்று தீக்ஷிதர் பிறந்த நாள்-08-04-2019)

(பெரியவாளின் சங்கீத ரசனை)04frPeriya va - 2025

1961ல் பெரியவா தேவகோட்டையில் முகாம். காஷ்ட மௌனம்! சின்ன அசைவு கூட இல்லாமல் பட்டகட்டை மாதிரி இருந்தார். இது ஒருவாரம், பத்து நாள் என்று நீடித்துக் கொண்டே போனது. பெரியவாளைப் பேச வைக்க, பாரிஷதர்களும், பக்தர்களும் பண்ணின பாச்சா எதுவுமே பலிக்கவில்லை. ஒருநாள் காலை, காரைக்குடியிலிருந்து நகரத்தார் சிலர் பெரியவாளை தர்சித்து, தங்கள் விஞ்ஞாபனங்களை ஸமர்ப்பித்தனர். பெரியவா கேட்டுக் கொள்கிறாரா என்பது கூட தெரியவில்லை.

அப்படி சொல்லும்போது, ப்ரபல இசை மேதை அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ ஐயங்கார் காரைக்குடியில்தான் இருக்கிறார் என்று சொன்னார்களோ இல்லையோ, அத்தனை பேரும் ஆச்சர்யப்படும் வகையில், “அவரை இங்கே அழைச்சிண்டு வர முடியுமா?..” என்று ஜாடையில் கேட்டார் பெரியவா! அன்று மத்யானமே அரியக்குடி பெரியவா முன் ஆஜராகிவிட்டார்! பெரியவாளின் பரம பக்தர் அவர். தனக்காகவே ஜகதாச்சார்யார் தன்னுடைய காஷ்ட மௌனத்தைக் கூட விட்டுவிட்டு, கூப்பிட்டனுப்பி இருக்கிறார் என்று நெஞ்சம் தழுதழுக்க பெரியவாளை நமஸ்கரித்தார்.

தேவகோட்டையில் பெரியவா தங்கியிருந்த இடம் ஒரு யாத்ரிக விடுதியின் பின்பக்கம் உள்ள தோட்டத்தில்தான்! அங்கிருந்த ஒரு சின்ன ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டு இருந்தபடி எல்லாருக்கும் ஜன்னல் வழியாக தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார்

செடியும் கொடியும் புல்லும் மண்டிய பகுதியில் நின்று கொண்டுதான் பெரியவாளை தர்சனம் பண்ணவேண்டும். மொஸைக் தரை சொகுஸுக்காரார்களுக்கு இங்கே கொஞ்ச நேரம் நிற்பது கூட கஷ்டந்தான்! அப்படியிருக்கும்போது அரியக்குடி அங்கே வந்து அந்தக் காட்டுத் தோட்டத்தில், அப்படியே ஜன்னலுக்கு கீழே தண்டனிட்டு எழுந்தார். அத்தனை நாள் காஷ்ட மௌனத்திலிருந்தவர் அரியக்குடியைப் பார்த்ததும், மடை திறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்தார்.

“நீ ராஷ்ட்ரபதி அவார்டெல்லாம் வாங்கினதாக் கேள்விப்பட்டேன். அப்போ ஒனக்கு ரெட் கார்பெட் போட்டு, அதான்….நடை பாவாடையா ரத்னக் கம்பளம் போட்டு பெரிய்ய சதஸ்ல கௌரவப்படுத்தியிருப்பா

நா….என்னடான்னா….இங்க ஒரே கல்லும் முள்ளுமா ஒரு கீக்கெடத்துல ஒன்னை ஒக்காத்தி வெச்சுட்டேன்! எதுக்கு ஒன்னை கூப்டேன்…ன்னா, ‘ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே’ இருக்கே…. அதை யாராவுது ஸுத்தமாப் பாடி கேக்கணும்.ன்னு ஒரு ஆசை! ஒம்பேரு காதுல பட்டவொடனே அந்த நெனைப்பு வந்துடுத்து. ஸுத்தமாப் பாடறதுன்னா, ஸங்கீதமும் ஸுத்தமாயிருக்கணும்; ஸாஹித்ய உச்சரிப்பும் ஸுத்தமாயிருக்கணும்; ரொம்பப் பேர் தெலுங்கு, ஸம்ஸ்க்ருத கீர்த்தனங்கள்… வார்த்தைகளை விரூபமாக்கிடறா!

பாடறப்போ, ஸங்கீதம் தாளம் இதுகளோட, கூட அர்த்தத்துக்கும் ஹானி இல்லாம எப்டி ஸந்தி பிரிக்கணுமோ, சேக்கணுமோ, அப்டிப் பாடணும்! நல்ல வாக்யேகாராள் க்ருதிகள்..ளாம் இதுமாதிரி ஸுத்தமாப் பதம் பிரிச்சுப் பாடறதுக்கு நிச்சியமா எடம் குடுக்கும். ஆனா, பாடறவாள்ள ரொம்பப் பேர் அர்த்தத்தை கவனிக்காம, ஸங்கீதத்தை மட்டும் கவனிக்கறதால, எழுத்துல இருக்கற பாட்டை காதுல கேக்கறப்போ, விபரீதமா அர்த்தம் குடுக்கும்படியாப் பண்ணிடறா!…..எப்டி…ன்னா? ஒரு உதாரணம் சொல்றேன்..

இந்த ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே..ல ஒரு எடத்ல, “குருகுஹாயாஜ்ஞான த்வாந்த ஸவித்ரே”ன்னு வரது. அதை, “குருகுஹாய, அஜ்ஞான த்வாந்த ஸவித்ரே”ன்னு பிரிஞ்சாத்தான் செரியான அர்த்தம் குடுக்கும். குருகுஹனுக்கு, அஞ்ஞான இருட்டுக்கு ஸூர்யனா இருக்கறவனுக்கு நமஸ்காரம்..ன்னு அர்த்தம். செல பேர் என்ன பண்றான்னா… “குருகுஹாயா..”ன்னு நீட்டீண்டே….போயி, அதை ஒரு தனி வார்த்தை மாதிரி காட்டிட்டு, “ஞான த்வாந்த ஸவித்ரே”ன்னு [சிரித்துக் கொண்டே] ஞான இருட்டுக்கு ஸூர்யன்னு விபரீதமாப் பாடறா!…..

“சங்கராச்சார்யம்” க்ருதி இருக்கே, நீ பாடறியோ என்னவோ, [வீணை] தனம்மா குடும்பத்ல வந்து, செம்மங்குடி சீனு, எம்.எஸ்.கூட பாடறா…..அதுல, “பரமாத்வைத ஸ்தாபன லீலம்”ன்னு வரது. அப்டீன்னா…வெளையாட்டாவே பரம தத்வமான அத்வைதத்த ஸ்தாபிச்சவர்.ன்னு அர்த்தம். பாடறச்சே “பரம அத்வைத ஸ்தாபன லீலம்”ன்னு [பெரியவா தன்னுடைய மதுரமான குரலில் இதை பாடியே காட்டினார்] அந்த “அ” ல அழுத்தங் குடுத்துப் பதம் பிரிச்சுப் பாடினாத்தான் செரியா அர்த்தம் குடுக்கும். நா…..ஏதோ, காமாசோமான்னு பாடறச்சேயே இந்த மாதிரி சங்கீதத்துக்கு ஹானியில்லாம, தாளத்துக்கும் ஹானியில்லாம, அதோட கூட அர்த்தத்துக்கும் ஹானியில்லாம பாட முடியறதுன்னு தெரியறதோல்லியோ? நான் சொன்னவாள்ளாமும் இப்டித்தான் பாடறா. ஆனா, புரிஞ்சுக்காதவா, புரிஞ்சுண்டு பாடணும்ங்கற கவலை இல்லாதவாள்ளாம் “பரமா…..”ன்னு அப்டியே…..நீட்டிண்டே போய் “த்வைத ஸ்தாபன லீலம்”ன்னு பாடி, அத்வைத ஆச்சார்யாளை “த்வைத” ஆச்சார்யாளா கன்வெர்ட் பண்ணிடறா….! [வெகு நேரம் சிரித்தார்]

ஸங்கீதத்ல, த்வைத-அத்வைதம்..ன்னு எந்த பேதமும் இல்லே. ஸங்கீதத்ல ஸங்கீதந்தான் முக்யம். ஸாஹித்யம் எதைப் பத்தினதோ, யாரைப் பத்தினதோ…அதைப் பாடறவா மனஸை அந்த ஸங்கீதமே ஐக்யப்படுத்திடறது. அதுனாலதான், நீ… வைஷ்ணவன், இருந்தாலும் ஒங்கிட்ட “ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய” ஒட்டிண்டிருக்கு; இல்லாட்டா, நீ அதுகிட்ட ஒட்டிண்டிருக்கே! ஏதோ ஒண்ணு. அந்த க்ருதி நீ பாடிக் கேட்ருக்கேன்! ஸங்கீத அம்ஸத்ல நீ ஸுத்தம்…ங்கறதுக்கு நான் சொல்ல வேணாம். ஸாஹித்யமும் நீ ஸுத்தமா பாடறே..ன்னு கவனிச்சேன். அதான் ஒனக்கு சொல்லி அனுப்பிச்சேன்!

என் தர்பார்ல கல்லும் முள்ளுந்தான்! பக்கவாத்யம் இல்லாம, தம்பூர் கூட இல்லாம வந்திருக்கே! எத்தனை ஸ்ரமமானாலும் ஸஹிச்சிண்டு, எனக்காக கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு!..” கடல்மடையாகப் பெரியவா பேசி முடித்ததும், அரியக்குடி கடல்மடையாகக் கண்ணீரை பெருக்கி விட்டார். விம்மிக் கொண்டே நெடுஞ்சாண்கிடையாக பெரியவாளை மீண்டும் நமஸ்கரித்தார். அழுகையும், ஆனந்தமும் ஒரு சேர…. “பெரியவா பாடச் சொல்லி, “பெரியவாளுக்கு”ன்னு பாடறதை விட, தாஸனுக்கு எந்தப் பெரிய கௌரவமும் இல்லே. தாஸனையும் ஒரு பொருட்டா நெனைச்சு, வலிஞ்சு வந்து ஒரு ஸந்தர்ப்பம் குடுத்து, பெரியவா அனுக்ரஹிச்சிருக்கற கருணையை என்ன சொல்றதுன்னு தெரியலே! ஸ்ருதி, பக்கவாத்யம் எல்லாத்தையுமே பெரியவாளோட இந்த அனுக்ரஹமே இட்டு நிரப்பணும். “அவ்விடத்ல” எதிர்பாக்கற அளவுக்கு, செரியாப் பாடறதுக்கும், அந்த அனுக்ரஹந்தான் ஸஹாயம் பண்ணணும்” என்று அவர் பாடுவதைப் போலவே அழகாக சொல்லிவிட்டு மீண்டும் நமஸ்காரம் பண்ணிவிட்டு அந்தக் கட்டாந்தரையிலேயே உட்கார்ந்து கொண்டு, பாட ஆரம்பித்தார்.

சுற்றி இருந்தவர்கள் கண்கள் குளமாயின. மஹா மஹா பெரியவா ஒரு சின்னக் குழந்தை மாதிரி “எனக்காகப் பாடறியா?” என்று கேட்ட எளிமையை நினைத்து உருகுவதா? ஸ்ரீ அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஹ்ருதயம் விம்ம பெரியவாளுடைய அனுக்ரஹத்தை வேண்டியதை நினைத்து உருகுவதா? மஹா பக்தரான ஸூர்தாஸ் பாடுவதைக் கேட்க ஆசையோடு அவர் முன் உட்கார்ந்திருக்கும் க்ருஷ்ணனைப் போல், அரியக்குடியின் ஸங்கீதத்தை ரஸித்துக் கொண்டிருந்தார் பெரியவா

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories