December 5, 2025, 7:58 PM
26.7 C
Chennai

” புத்தர் நீர் தான்” — பெரியவாளிடம் ஒரு பர்மியர்.

” புத்தர் நீர் தான்” — பெரியவாளிடம் ஒரு பர்மியர்.

( சங்கர ஜகத்குருவாக இருந்து கொண்டு எவரைக் கண்டித்திருக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள் அனுபவமும் தருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது )

கட்டுரையாளர்- ஸ்ரீ ஸ்ரீ ரா.கணபதி 2a2e8509fd23bfc926c95dc57ee8f945 2 - 2025
ப்ழைய அமுதசுரபி புத்தகத்திலிருந்து

1907 இல் பெரியவா பீடாதிபத்தியம் ஏற்ற போதிலும் காஞ்சியிலுள்ள ஸ்ரீ மடத்தில் முதல் வ்யாசபூஜை செய்தது 1953 இல்தான் . அதனை சேர வந்த சாதுர்மாசத்தின்போதும் அது முடிந்த பிற்படும் கூட பல மாசங்கள் மௌனம் பூண்டிருந்தார் . அதில் பெரும் பாகம் காஷ்ட மௌனம் . அதாவது சிறிய அசைவும் இல்லாமல் கட்டையை போல் சமைந்திருபார். .

இச் சமயம் பார்த்து பர்மாவைச் சேர்ந்த ஒரு கோடிஸ்வரர் தரிசனத்திற்கு வந்தார். பௌத்த மதத்தில் தீவிர அனுஷ்டானமுள்ள அவருக்கு ஆன்மியமாக ஒரு சங்கை(.ஐயம்) அது பெரியவாளாலேயே தீரும் என்று சமிக்ஞை பெற்று தான் காஞ்சிக்கு வந்திருக்கிறார் .

பர்மியர் கூறியதை அவர் காதில் வாங்கியதாகவே குறிப்பு காணோம்.

பர்மியரும் பொறுத்து பொறுத்து பார்த்தார்.

அந்நாள் ஸ்ரீ மட மேனேஜர் C.S. விஸ்வநாதையர் வெள்ளை மனதுடன் சொல்லுவார் : ” என்னால் தான் பொறுத்து கொள்ள முடியவில்லை. விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அந்த பர்மாகாரன் எத்தனை ஏக்கமும் துக்கமுமாயிருகிறான் என்று ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ,கோடிஸ்வரனாய் இருக்கிறானே , வந்த காரியம் அனுகூலமானால் நம்ம கஜானாவை ரொப்பி விடுவானே . இந்த எஜமானரானால் இப்படி பண்ணுகிறாரே என்று . எத்தனையோ முட்டி கொண்டு பார்த்தேன் . ஒன்றும் அந்த காஷ்டத்திடம் பலிக்கவில்லை !”

தவித்து வேண்டிய சந்தேக நிவாரணத்தைப் பெறாமலே பர்மியர் ஊருக்கு திரும்ப வேண்டிய நேரமும் வந்தது. பெரியவாள் சந்நிதியில் இருந்த அளவும் தம்மை அவர் கவனித்ததாகத் தெரியவிட்டாலும் , அந்த சாநித்யமே தமக்கு ஒரு பெரும் சாந்தி யூட்டியதாக ஸ்ரீ மடதினரிடம் அந்த பர்மியர் கூறிக்கடைசியாக ஒரு தரிசனம் செய்யச் சென்றார் – மடத்தின் கஜானாவையும் ஓரளவு நிரப்பிவிட்டு .

பெரியவாள் நேராக அவரை நோக்கினார். பல காலமாகப் புறப்பொருள் எதையும் உற்று நோக்காதிருந்த திருநயனங்களில் சூரியனின் ஒளியும் சந்திரனின் குளுமையும் கலந்து நர்த்தனமிட்டன .

பர்மியர் பரவசரானார் . அழுதார் , சிரித்தார் ! ஆடினார் , பாடினார்! பன்முறை பணிந்தெழுந்தார் .

சரேலென பெரியவாளை மிகவும் சமீபித்து அவருடைய காதோடு காதாக ஏதோ விம்மி விம்மிக் கூறினார்.

பல காலமாக நெகிழாதிருந்த திரு அதரங்கள் தாமரை மலர்வதைப்போலத் திருநகை புரிந்தன
.

பூமியில் கால் பாவாமலே பர்மியர் ஆனந்தமாக அகன்றார். அவருடைய இதய கஜானா நிரம்பிவிட்ட இறும்பூது!

மாதங்கள் கடந்து பெரியவாள் பெரியவா பேச்சுலகுக்குத் திரும்பினார்.

ஸ்வாதீன பக்தர்கள் சிலர் அன்று பர்மியர் அழுது சிரித்து ஆடி பாடும் படி என்ன நேர்ந்தது என்று அவர் சொல்லித்தானாக வேண்டும்மென்று அடம் பிடித்தனர் .

அவரும் அதற்கும் மேல் அடம் பிடித்தார். அது பற்றி சொல்லவதில்லை என்று.

“அவனுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு எப்படித் தெரியும் ? அவனையே போய் கேட்டுக்கோங்கோ !” என்றார்.

” சரி , பெரியவா காதுலே அவர் என்னமோ சொல்லி , பெரியவா அதை அங்கீகாரம் பண்ணிண்டு சிரிச்சேளே ! அதுவாது என்னன்னு பெரியவா சொல்லலாமே !” என்றார் அவர்களில் ஓர் அதிஸ்வாதீன அடியார்.

“”அதுவா?” என்று பெரியவாள் சட்டென்று விஷயத்தைக் கொட்டி விட்டார் . குறும்புகொப்பளிக்க

” பொழுது விடிஞ்சு பொழுது போனா நான் யாரைக் கண்டனம் பண்றேனோ அந்த புத்தரைச் சொல்லி “அவர் நீதான்!” ன்னுட்டுப் போய்ட்டான் !”

சங்கர மடத்தின் ஜகத்குருராக இருந்து கொண்டு எவரைக்கzண்டித்திருக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள் அனுபவமும் த ருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories