December 3, 2021, 3:18 pm
More

  ஸ்ரீ ஸ்கந்த ஷோடஸ நாமானி: அர்த்தத்துடன்..!

  murugar-2
  murugar-2

  ஸ்ரீ ஸ்கந்த³ ஷோட³ஸ² நாமானி

  குமாரதந்த்ர ஆக³மே

  ஜ்ஞானஸ²க்தித⁴ரஸ்கந்த³: தே³வஸேனாபதிஸ்ததா² |
  ஸுப்³ரஹ்மண்யோக³மாரூட⁴: ஸ²ரகாநநஸம்ப⁴வ: ||
  கார்த்திகேய: குமாரஸ்²ச ஷண்முக² ஸ்தாரகாந்தக: |
  ஸேநாநீ ப்³ரஹ்மஸா²ஸ்தாச வல்லீ கல்யாண ஸுந்த³ர: ||
  பா³லஸ்²ச க்ரௌஞ்ச பே⁴த்தாச ஸி²கி²வாஹன ஏ வச |
  ஏதானி ஸ்கந்த³ நாமானி ஷோட³ஸ² ப்ரத்யனந்தர: ||
  ய: படே²த் ஸர்வ பாபேப்⁴ய: ஸுமுச்யதே ஸமஹாமுனே |
  ஏதேஷாம்ʼ ப்ரதிரூபாணாம்ʼ த்⁴யான பே⁴த³ இஹோச்யதே ||

  ஸ²க்தித⁴ர ஸ்வாமி த்⁴யானம்
  ஏகாஸ்யம்ʼ த்³விபு⁴ஜம்ʼ வாமே வஜ்ரம்ʼ த³க்ஷிணஜே கரே |
  இச்சா² ஜ்ஞான க்ரியா ஸ²க்தி ரூபம்ʼ ஸ²க்தித⁴ரம்ʼ ப⁴ஜே ||

  ஸ்கந்த³ ஸ்வாமி த்⁴யானம்
  கல்பத்³ருமம்ʼ ப்ரணமதாம்ʼ கமலாருணாப⁴ம் ஸ்கந்த³ம்ʼ பு⁴ஜத்³வயம்ʼ அநாமயமேக வக்த்ரம் |
  காத்யாயனீ ஸுதமஹம்ʼ கடிப³த்⁴த³ தா³ம, கௌபீன த³ண்ட³க⁴ரண த³க்ஷிண ஹஸ்தமீடே³ ||

  ஸேனாபதி ஸ்வாமி த்⁴யானம்
  நௌம்யாதி³த்ய ப்ரதீ³ப்தம்ʼ த்³வித³ஸ²நயனம் ஷண்முக²ம்ʼ மந்த³ஹாஸம்ʼ வாமாங்கே
  ஸுஸ்தி²தாயா: த்⁴ருʼதஸரஸி ருஹாலிங்கி³தாயா: ப்ரியாயா: |
  உத்துட்³கோ³ருஸ்தனாக்³ரே விஹிதகரதலம் பீ⁴திக²டம்ʼஞ்ச ஸூ²லம்ʼ ஹ்ராதி³
  ந்யுத்³தீ³ப்த ஸ²க்தி வ்வஸனத⁴நக³தா³குக்குடாப்³ஜேஷு ஹஸ்தம் ||

  ஸுப்³ரஹ்மண்ய ஸ்வாமி த்⁴யானம்
  ஸிந்தூ³ராருணமிந்து³காந்திவத³னம்ʼ கேயூரஹாராதி³பி⁴:
  தி³வ்யைராப⁴ரணைர்விபூ⁴ஷித தநும்ʼ ஸ்வர்கா³தி³ ஸௌக்²யப்ரத³ம் |
  அம்போ⁴ஜாப⁴யஸ²க்திகுக்குடத⁴ரம்ʼ ரக்தாங்க³ராகா³ம்ʼஸு²கம்ʼ
  ஸுப்³ரஹ்மண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம்ʼ பீ⁴திப்ரணாஸோ²த்³யதம் ||

  க³ஜவாஹன ஸ்வாமி த்⁴யானம்
  ஏகாநநம்ʼ த்³விநயனம்ʼ வரகுக்குடௌ ச
  வாமத்³வயே நிஸி²த ஸ²க்த்யப⁴யத்³வயஞ்ச |
  பி³ப்⁴ராணமீஸ்வர ஸுதம்ʼ தபநா யுதாப⁴ம்ʼ
  நித்யம்ʼ நமாமி க³ஜவாஹன மிஷ்டஸித்⁴த³யை ||

  ஸ²ரவணப⁴வ ஸ்வாமி த்⁴யானம்
  ஸ²க்திம்ʼ த⁴ண்டாம்ʼ த்⁴வஜஸரஸிஜே குக்குடம்ʼ பாஸ²த³ண்டௌ³
  டாங்கம்ʼ பா³ணம்ʼ வரத³மப⁴யம்ʼ கார்முகஞ்ச உத்³வஹந்தம் |
  பீதம்ʼ ஸௌப்⁴யம்ʼ த்³வித³ஸ²நயனம்ʼ தே³வ ஸந்தை⁴ருபாஸ்யம்ʼ
  ஸத்³பி⁴: பூஜ்யம்ʼ ஸ²ரவணப⁴வம்ʼ ஷண்முக²ம்ʼ பா⁴வயாமி ||

  கார்த்திகேய ஸ்வாமி த்⁴யானம்
  வரத³குலிஸ²கே²டம்ʼ வாமஹஸ்தத்ர யேச
  த³த⁴தமப⁴யஸ²க்திம்ʼ க³ட்³க³மன்யத்ரயே ச |
  தருணரவி ஸமாப⁴ம்ʼ ஸாது⁴பி⁴: பூஜ்யமானம்ʼ
  கமலவத³ன ஷட்கம்ʼ கார்த்திகேயம்ʼ நமாமி ||

  குமாரஸ்வாமி த்⁴யானம்
  ஸவ்யத்³வயே நிஸி²தஸ²க்த்யேஸிமாத³தா⁴நம்ʼ
  வாமத்³வயே(அ)பி⁴மதகுக்குட கே²டகஞ்ச |
  வல்லீபதிம்ʼ விபு³த⁴லோசனபூர்ணசந்த்³ரம்ʼ
  கலயாண தா³னநிரதம்ʼ கலயே குமாரம் ||

  ஷண்முக²ஸ்வாமி த்⁴யானம்
  வந்தே³ ஸிந்தூ³ரகாந்தி ஸ²ரவிபிநப⁴வம்ʼ ஸ்ரீமயூராதி⁴ரூட⁴ம்ʼ
  ஷட்³வக்த்ரம்ʼ தே³வநாத²ம்ʼ மயூரி பதனயா வல்லப⁴ம்ʼ த்³வாத³ஸா²க்ஷம் |
  ஸ²க்திம் பா³ணம்ʼ க்ருʼபாணம்ʼ த்⁴வஜமபிச க³தா³ம்ʼ சாப⁴யம்ʼ ஸவ்யஹஸ்தே
  சாபம்ʼ வஜ்ரம்ʼ ஸரோஜம்ʼ கடகமபி வரம்ʼ ஸூ²லமன்யைர்த³தா⁴னம் ||

  தாரகாரி ஸ்வாமி த்⁴யானம்
  வரத³மங்குஸ²த்⁴வஜே ச கடகௌசாபவஜ்ரகம்ʼ
  அப⁴யபாஸ²சக்ர க²ட்³க்³ முஸல ஸ²க்திமன்வஹம் |
  த்³வித³ஸ²பாணிபி⁴ர்த³தா⁴நமருணகோடிஸன்னிப⁴ம்
  ப⁴ஜததாத்கரி மத்ரப⁴வத விநாஸ²காரணம் ||

  ஸேனானீ ஸ்வாமி த்⁴யானம்
  அப⁴யமஸி ரதா²ங்க³ஞ்சாங்குஸ²ம்ʼ ஸ²க்தி ஸு²லம்ʼ
  வரத³ குலிஸ²பாஸ²ம்ʼ பத்³மத³ண்டௌ³ க³தா³ஞ்ச |
  த³த⁴தாப⁴ய பக்ஷத்³வாத³ஸா²யா: அஹஸ்தை:
  த்³வித³ஸ²கமலனேத்ரம்ʼ தே³வஸேனான்யமீடே³ ||

  ப்³ரஹ்மஸா²ஸ்த்ருʼ ஸ்வாமி த்⁴யானம்
  ராகே³ க்ரரேச யுக³லே வரகுண்டி³கேச ஸவ்யேக்ஷஸூத்ரமப⁴யம்ʼ த³த⁴தம்ʼ விஸா²கீ² |
  வல்யா யுதம்ʼ வனஜலோசனமேகவக்த்ரம்ʼ வந்தா³மஹே வனஜஸம்ப⁴வஸா²ஸிதாரம் ||

  வல்லீ கல்யாண ஸுந்த³ர ஸ்வாமி த்⁴யானம்
  ஹஸ்தத்³வந்த்³வே(அ)க்ஷமாலாம்ʼ அப⁴யமபித்⁴ருʼதம்ʼ குண்டி³காஸ்²ரோணிப³ந்த⁴ம்ʼ
  ஸவ்யே வாமே நிஷண்ணம்ʼ ஸ்ருவத்⁴ருʼத விதி⁴னா த்³யமானே நம்தம் |
  ஸர்வாலங்காரயுக்தம்ʼ ஜலகலஸ²த்⁴ருʼதம்ʼ விஷ்ணுனாசாருணாப⁴ம்ʼ
  வல்லீ கல்யாணமூர்த்திம்ʼ ஸகலஸுரக³ணை: ஸ்தூயமானம்ʼ ப்ரபத்³யே ||

  பா³லஸ்வாமி த்⁴யானம்
  பா³லபத்³மாஸவ்யகடிஸம்ʼயுதம்ʼ வாமம்ʼ பத்³மகாந்தினிப⁴மேகமுக²ஞ்ச |
  பா³லவ்ருʼத்⁴தி³கரமீஸ்²வர ஸூனும்ʼ ப³லமுன்னதபு⁴ஜம்ʼ ப்ரணதோ(அ)ஸ்மி ||

  க்ரௌஞ்ச பே⁴த³ன ஸ்வாமி த்⁴யானம்
  அப⁴யஸி²தக்ருʼபாணௌ ஸ²க்தி பா³ணௌ: ச ஸவ்யை:
  வரத³ குலிஸ²சாபம்ʼ கே²டகம்ʼ சான்ய ஹஸ்தை: |
  த³த⁴தமமர ஸேநாநாயகம்ʼ சாஷ்டபா³ஹும்ʼ
  கமலவத³னஷட்கம்ʼ க்ரௌஞ்சபே⁴த்தாரமீடே³ ||

  murugan thiruchendur
  murugan thiruchendur

  ஸி²கி²வாஹன ஸ்வாமி த்⁴யானம்
  வித்³ருமப்ரபே⁴கமுக²ம்ʼவிபு⁴ம்ʼ வஜ்ரஸ²க்தி வரதா³ப⁴யபாணிம் |
  தே³வலோகரிபுக்⁴னமவிக்⁴னத³ம் யுக்³மஸ²க்தி ஸஹிதம்ʼ ஸி²கி²வாஹனம் ||

  ஒரு திருமுகமும் இரண்டு திருக்கரங்களும் உடையவ‌ரும், இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி ரூபமாகிய சக்தியாயுதத்தை வலது திருக்கரத்திலும், வஜ்ராயுதத்தை இடது திருக்கரத்திலும், ஏந்தப் பெற்றிருப்பவரும் ஆன‌ சக்தி தர ஸ்வாமியை ஸேவிப்போம்.

  பிரசன்னமான ஒரு திருமுகமும், இரண்டு திருக்கரங்களும் உடையவரும், வலது கரத்தில் தண்டம் பிடித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து நின்ற திருக்கோலம் கொண்ட‌வரும், செங்கதிரோனைப் போன்றவரும், கெளபீநம் அணிந்தவரும், பார்வதி தேவியின் புத்திரரும் விரும்பியதை அளிக்கும் கற்பகவிருக்ஷம் போன்றவரும் ஆகிய ஸ்கந்த ஸ்வாமியை நமஸ்கரிப்போம்.

  புன்னகை தவழகின்ற ஆறுமுகமும் பன்னிரு கண்களும் உடையவரும், சூரிய பிரகாசம் போன்ற திருமேனியரும், ஒரு திருக்கரத்தில் தாமரை மலர் பிடித்து, மற்றொரு திருக்கரத்தால் தழுவப்பெற்ற மனைவியை இடது துடை மீது வைத்திருப்பவரும், அணைத்த கரமும், அபயகரமும், கேடயம், கத்தி, சூலம், வஜ்ரம், சக்தி, பாணம், வில், கதை, கோழி, தாமரை மலர், ஆகியவற்றைத் தரித்த கரங்களை உடையவரும் ஆகிய ஸேனாபதி ஸ்வாமியை வணங்குகிறேன்.

  செம்மதியின் ஒளி போன்ற திருமுகம் உடையவரும், தோள்வளை, முத்து மாலை முதலிய திவ்யாபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திவ்ய‌சரீரம் உள்ள‌வரும், சுகத்தை அருள்பவரும், தாமரை, அபயம், சக்தி, கோழி இவற்றை நான்கு திருக்கரங்களில் தாங்கி செந்நிற ஆடையைத் தரித்திருப்பவரும், பயத்தைப் போக்குபவரும் ஆகிய சுப்ரமண்ய ஸ்வாமியை உபாசிப்போம்.

  ஒரு திருமுகத்தையும் இரண்டு விழிகளையும் உடையவரும், வரதம், குக்குடம்(கோழி) ஆகியவை இடது திருக்கரங்களிலும், சக்தி அபயம், ஆகியவை வலது திருக்கரங்களிலும் ஏந்தி, கோடி சூர்ய ப்ரகாசம் உள்ளவரும், சிவனது செல்வக்குமாரரும் யானையின் மீது இருப்பவரும், வேண்டுவோர் வேண்டுவதை அருள்கின்றவருமான‌ கெஜ வாஹந ஸ்வாமியை வணங்குகிறேன்.

  சாந்தம் நிறைந்த ஆறு திருமுகங்களும், பன்னிரு விழிகளும், பொன்னிற திருமேனியும் உடையவரும், சக்தி, மணி, துவஜம், தாமரை, குக்குடம், பாசம், தெண்டம், மழு, பாணம், வரதம், அபயம், வில் இவைகளைத் தாங்கிய பன்னிரு திருக்கரங்களுடன் விளங்குபவரும், தேவ கணங்களால் வழிபடத் தக்கவரும், சாதுக்களால் சேவிக்கப்பட்டவருமாகிய சரவணபவரை வணங்குகிறேன்.

  வரதம், வஜ்ரம், கேடகம் இவைகளை இடது திருக்கரங்கள் மூன்றிலும், அபயம், சக்தி, கத்தி இவற்றை மற்ற மூன்று திருக்கரங்களிலும் ஏந்தியுள்ளவரும், இளங்கதிருக்குச் சமமான காந்தி உள்ளவரும், கமலம் போன்ற ஆறு திருமுகங்களும் உள்ளவரும், சாதுக்களால் பூஜிக்கப்பட்டவரும் ஆகிய கார்த்திகேயரை நமஸ்கரிக்கிறேன்.

  8.வலது திருக்கரங்கள் இரண்டில் சக்தி ஆயுதத்தையும் கத்தியையும், இடது திருக்கரங்கள் இரண்டில் விருப்பமான குக்குடம்(கோழி), கேடகம் ஆகிய இந்நான்கு படைகளைத் தாங்கியவரும், வள்ளி தேவியின் நாயகரும், நிறைமதி போன்ற அழகிய விழிகளும் உள்ள‌ தேவரே நீங்கள் விரும்பிய மங்களத்தை அருள்பவராகிய‌ குமாரக் கடவுளாவார்.

  ஆறு திருமுகங்கள் உடையவரும், கருணை பொங்கும் பன்னிரு விழிகளை உடையவரும், சக்தி, அம்பு, கத்தி, துவஜம், கதை, அபயம் இவை பொருந்திய வலது திருக்கரங்களை உடையவரும், வஜ்ரம், வில், தாமரை, கேடகம், சூலம், வரதம் என்பன அமைந்த இடது திருக்கரங்களை உடையவரும், கட்டழகுக்கெல்லாம் உறைவிடமாக விளங்கும் திருமேனி உள்ள தேவராஜரின் குமரிக்கு நாயகரும், சரவண வாபியுள் உற்பவித்தவரும், மயில் வாஹநாரூடரும் ஆகிய ஷண்முக மூர்த்தியை வணக்கம் செய்கிறேன்.

  ஆறு திருமுகங்களும், பன்னிரு விழிகளும் , அபயம், பாசம், சக்ரம், கத்தி, வலக்கை, சக்தி என்பனவமைந்த வலத்திருக்கரங்கள் ஆறும், வ‌ரதம், அங்குசம், துவஜம், கேடகம், வில், வஜ்ரம் ஆகியவை ஏந்திய இடத்திருக்கரங்கள் ஆறும் கொண்டவரும், கோடி சூர்ய ப்ரகாசம் போன்ற திருவுருவம் உடையவரும், பாவத்தை ஒழிக்கக் காரணமானவருமான தாரகாரி ஸ்வாமியை தொழுவோம்.

  ஆறு திருவதனங்களும், ஈராறு விழிகளும், அபயம், கத்தி, சக்ரம், அங்குசம், சக்தி, சூலம், வரதம், வஜ்ரம், பாசம், பத்மம், தெண்டம், கதை என்பனவற்றைத் தாங்கி அருளும் திருக்கரங்கள் பன்னிரெண்டும் பிரகாசிக்க, தேவர்களின் சேனைகளுக்கு தலைவராக அருளும் ஸேனானி மூர்த்தியைத் துதிப்போம்.

  தாமரை மலர் போன்ற விழிகள் உள்ள ஒரு திருமுகமும், வரதம், கமண்டலம் ஆகிய இரண்டும் இடத்திருக்கரங்களில் பொருந்த, அபயம், அக்ஷவடம் என்பன வலத்திருக்கரங்களில் பொருந்த அருளும் திருக்கோலம் உடையவரும் , வனஜயாகிய வள்ளீ என்னும் சக்தியை உடையவரும், நான்முகருக்கு ஆசிரியரும், விசாகர் என்று அழைக்கப் பெற்றவருமாகிய ப்ரஹ்ம சாஸ்த்ரு ஸ்வாமியை வணங்குவோம்.

  வலத் திருக்கரங்களிரண்டும் முறையே அபயமாகவும், உருத்திராக்ஷமாலையை ஏந்தியதாகவும் நிற்க‌, இடத் திருக்கரங்களில் ஒன்று இரத்தின கும்பத்தை (கமண்டலம்) ஏந்தி நிற்கவும், மற்றொன்று இருப்பினடத்தே பொருந்தவும் விளங்க, தெய்வத் திருவெல்லாம் திரண்டாற் போலும் திருவுருவம் உடைய வள்ளியம்மை வலது பக்கம் விளங்கி நிற்க, சர்வ அலங்காரத்துடன் கூடிய மாமனாகிய திருமால், ‘என் மகளைக் கொடுக்கிறேன் ஏற்றருள்க’ என்று தாரை வார்த்துக் கொடுக்க, திருமணக்கோலம் கொண்டருளும், வல்லீ கல்யாண ஸுந்த³ர ஸ்வாமியைத் தொழுகின்றேன்.

  திருவரையினடத்தே இடக்கையை வைத்தருளி கமலத்தை வலக்கையிலேந்தி தாமரை மலர் நிறத்தை யொத்த ஒரு திருமுகமும் வலிமை பொருந்திய இரு தோள்களும் விளங்க அருளுபவரும், இறைவனரது அருமை மைந்தரும், சந்தான வ்ருத்தியை செய்தருளுபவருமான‌ பால ஸ்வாமியை நமஸ்கரிக்கின்றேன்.

  ஆறு திருமுகங்களும், பன்னிரு விழிகளும், அபயம், கத்தி, சக்தி, பாணம் என்பவையமைந்த வலத்திருக்கரங்கள் நான்கும், வரதம், வஜ்ரம், வில், கேடகம் இவை கொண்ட இடத்திருக்கரங்கள் நான்கும் உடைய அமர சேனாநாயகரான க்ரௌஞ்சபேத ஸ்வாமியைப் போற்றுவோம்.

  வஜ்ரம், சக்தி, வரதம், அபயம் கொண்ட திருக்கரங்கள் நான்கும், ஒரு திருமுகமும், பவழ நிறத்தையொத்த திருமேனியும் உடையவரும், தேவர்களுக்கு விரும்பியதை அருள் செய்பவரும், ருத்ரரிடம் தோன்றியவரும், மயில் வாஹன‌த்தில் வீற்றிருப்பவரும் ஆகிய சிகிவாஹந ஸ்வாமியை நமஸ்கரிக்கின்றேன்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,778FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-