சுற்றுப்புறத்தை கிருமி நீக்கம் செய்து தூய்மையாக வைத்து கொள்வதை போலவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்களையும் கிருமி நீக்கம் செய்வது முக்கியம். இந்த கோவிட் காலத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் ஆன்லைன் கிளாஸ் காரணமாக ஃபோன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள் உள்ளிட்ட பல கேஜெட்டுகள் முன்பை விட அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதால் அவற்றை கிருமி நீக்கம் செய்வது கட்டாயமான ஒன்றாக இருக்கிறது.
சாதனங்களின் மேற்பரப்பு அழுக்கு, கிருமிகள் மற்றும் வைரஸ்களை கொண்டிருப்பதால் மேற்பரப்புகளின் வழியே கோவிட் பரவும் ஆபத்தும் நீடிக்கிறது. எனவே, உங்கள் ஃபோன் ஸ்கிரீன் மற்றும் லேப்டாப்களில் கிருமி நீக்கம் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம். மென்மையான துணி அல்லது சிறிது ஆல்கஹால் சார்ந்த சானிடைசர் மூலம் துடைப்பது போன்ற எளிய வழிகள் உங்கள் பல டிவைஸ்களை கிருமி நீக்கம் செய்வதற்கான முன்னெச்சரிக்கை படிகளாக இருக்கின்றன.
உங்கள் சாதனங்களை எப்போது கிருமி நீக்கம் செய்தாலும் கீழ்காண்பனவற்றை பின்பற்றவும்..
பொது வெளியில் பயன்படுத்தினீர்கள் என்றால்..
கொரோனாவின் துவக்க காலத்தில் நிலவிய உச்சகட்ட பீதி காரணமாக வெளியே நாம் போட்டு கொண்டு சென்ற ஆடைகள், எடுத்து சென்ற பொருட்கள் மற்றும் வாங்கி வரும் காய்கறிகளை கூட கிருமி நீக்கம் செய்து கொண்டிருந்தோம். பேரிடர் முடிவுக்கு வராத நிலையில் அதே போன்ற முன்னெச்சரிக்கைகள் இப்போதும் தேவை. எனவே பொதுவெளிக்கு சென்ற பின்னர் நாம் பயன்படுத்தும் மொபைல் உள்ளிட்ட டிவைஸ்களை வீட்டிற்கு வந்ததும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பை பொதுவெளியில் வைத்து பயன்படுத்தும் போது அவற்றின் மேற்பரப்பில் கண்ணனுக்கு தெரியாத கோவிட் வைரஸ் தொற்றி கொள்ள கூடும். அதே போல பொதுகழிப்பறைகளில் வைத்து மொபைல்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அழுக்கு, கைரேகைகளை முதலில் தேய்க்கவும்..
உங்கள் டிவைஸ்களை கிருமி நீக்கம் செய்யும் முன், அதன் மேற்பரப்புகளில் தெரியும் படிந்திருக்கும் கிரீஸ், அழுக்கு மற்றும் சிதறி காணப்படும் டஸ்ட்கள் என அனைத்தையும் முதலில் அகற்ற வேண்டும். அதே போல உங்கள் டிவைஸ்களின் மேற்பரப்புகளையும் துடைக்க உலர்ந்த மற்றும் மென்மையான மைக்ரோஃபைர் துணியை பயன்படுத்தவும். டிஷ்யூ அல்லது பேப்பர் டவல்களை பயன்படுத்தினால் டிவைஸ்களின் மேற்பரப்பில் கீறல் விழ கூடும்.
அனைத்து பகுதி..
உங்கள் டிவைஸின் மேற்பரப்பை மட்டுமல்லாது பின்பக்கம் மற்றும் சைடு என அனைத்து அப்பகுதியையும் சுத்தம் செய்வது முக்கியம். கிருமிநாசினியை நேரடியாக டிவைஸ்களின் மீது அப்பளை செய்து துடைக்காமல், ஒரு துணியில் தெளித்து எடுத்து கொண்டு டிவைஸை துடைக்க துவங்குங்கள். 70% ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினியை ஒரு துணியில் தெளிக்கவும் அல்லது உங்கள் சாதனங்களை மெதுவாக துடைக்க க்ளோராக்ஸ் கிருமிநாசினியைப் பயன்படுத்தவும். உங்கள் டிவைஸ்களை மெதுவாக துடைக்க க்ளோராக்ஸ் கிருமிநாசினியை (Clorox disinfectant) பயன்படுத்தவும்.!
ஆஃப்..
உங்கள் டிவைஸ் சார்ஜ்ஜில் இருக்கும் போது அதை சுத்தம் செய்ய ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினியைப் பயன்படுத்துவது டிவைஸை சேதப்படுத்தி விடும். எனவே கிருமி நீக்கம் செய்யும் முன் சார்ஜை ஆஃப் செய்து விடவும்.
சோப் & வாட்டர் ட்ரீட்மென்ட்..
மொபைல் மட்டுமல்ல மொபைல் கேஸ்களும் கூட வைரஸ்கள் பரவ காரணமாக இருக்கலாம். எனவே உங்கள் மொபைல் கவர்களை சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி கழுவுவது நன்மை தரும்.