Breaking News
கண்ணொளி வழங்கும் கருணைக்கடல்; உளங்கைக் கொணர்ந்த நாயனார் – எம்பார்!
வைணவ பெரியோர்களில் மிக்கப் புகழுடைய எம்பார் என்பவர் திருப்பெரும்பூதூரின் அருகில் உள்ள மழலைமங்கலத்தில் (தற்போதைய மதுரமங்கலம்) கிபி 1026 ஆம் ஆண்டு தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் கமலநயன பட்டர் என்பவருக்கும் ஸ்ரீதேவி அம்மாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார்.
வெள்ளிக்கிழமை திருப்பதி பெருமாளுக்கு அபிஷேக நீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது தெரியுமா?
ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். தினமும் பல லட்சம் மக்கள் வந்து வணங்கும் இந்த கோவில் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. கி.மு.400-100 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் இந்த கோவிலை பற்றிய குறிப்புகளை நம்மால் அறிய முடிகிறது. பல சிறப்புகளோடு மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவிலில் இரண்டு தங்க கிணறுகள் உள்ளன. அந்த தங்க கிரணு எங்கே உள்ளது. அது எப்படி எப்போது உருவானது என்பது பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக விஷ்ணுவின் அவதாரமான பெருமாள் திருவேங்கடத்தில் குடிகொண்டார். அப்போது அனைவருக்கு உணவு தயாரிப்பதற்காக லட்சுமி தேவி ஒரு தீர்த்தயத்தை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. அந்த தீர்த்தமே லட்சுமி தீர்த்தும் என்றும் ஸ்ரீ தீர்த்தம் என்றும் அழைக்கப்பட்டது. அதே போல பூதேவியும் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். அதுவே பூதீர்த்தம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இவை இரண்டு மண்ணுக்குள் புதைந்து போனது.
பல வருடங்களுக்கு பிறகு, பெருமாளுக்கு பூஜை செய்ய உகந்த பூக்களை கொண்ட ஒரு தோட்டத்தை உருவாக்க முற்பட்டார் ஒரு இலஞ்சர். அப்போது அவர் குழி தோண்டுகையில் ஸ்ரீதீர்த்தத்தையும் பூதீர்த்ததையும் கண்டறிந்தார். ஆனால் அந்த இளஞ்சரின் காலத்திற்கு பிறகு மீண்டும் அந்த இரண்டு தீர்த்தங்களும் சிதிலம் அடைந்தன. அந்த இளஞ்சரின் புண்ணியத்தால் அவர் அடுத்த பிறவியில் தொண்டைமான் சக்ரவர்த்தியாக பிறந்தார் என்று கூறப்படுகிறது.அதன் பிறகு அவர் திருமலை கோவிலை கட்டமைத்தார். அதோடு முன் ஜென்மத்தில் தான் கண்டறிந்த தீர்த்தத்தை சுற்றி தங்க கவசம் செய்துள்ளார். அந்த கிணறே தற்போது தங்க கிணறு என்று அழைக்கப்படுகிறது. உலகில் தங்கத்தால் அலங்கரிக்க பட்ட ஒரே கிணறு இதுமட்டுமே என்று கூறப்படுகிறது.கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிணற்றின் நீர் பயன்படுத்துவதற்கு எதுவாக இல்லை என்பதால் இந்த கிரணு அரசால் மூடப்பட்டது. ஆனால் பகவானின் அருளால் கடந்த 2007 ஆண்டு இந்த கிணற்றின் நீரானது பயன்படுத்துவதற்கு எதுவாக மாறியது என்று கூறப்படுகிறது. இந்த தங்க கிணறில் உள்ள நீரை கொண்டு தான் ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த கிணறுகள் திருப்பதியில் ஒரு சிறு மேட்டில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
தை புனர்பூசம்: ஸ்ரீராமானுஜரின் இளவல் எம்பாரின் 995வது திருநட்சத்திரம்!
இன்று.. 07/02/2020,தை புனர்பூசம், ஸ்ரீ எம்பார் ஸ்வாமியின் 995ஆவது திருநட்சித்திரம். இவர் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் உள்ள மழலைமங்கத்தில் -தற்போது-மதுரமங்கலம்.(சுங்குவார்சத்திரம்)அவதரித்தார்.
செந்நெல்லரிசி, மாவடு, கீரை அமுது செய்வித்த அரிவாட்டாய நாயனார்!
இறைவனது திருக்கரங்களால் தீண்டப்பெற்ற சில நாயன்மார்களில் இவரும் ஒருவர் என்பது அறிந்து இன்புறத் தக்கதாம், இக்காட்சிகளை காட்டும் பாடல்கள் இவை
காட்டுக்குள்ளே திருவிழா: தெலங்காணாவின் கும்பமேளா (பிப்.5-8)
காட்டுக்குள்ளே திருவிழா - தெலங்காணாவின் கும்பமேளா (பிப்ரவரி 5 முதல் 8 வரை) மேடாரம் என்பது தண்டகாரண்யத்தில் ஒரு பகுதி. இது தக்காணப் பீடபூமியில் உள்ள மிகப்பெரிய உயிர்வாழ் காட்டின் ஒரு பகுதியாகும்
திருச்செந்தூர் கோயிலில்… இனி பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்!
டிக்கெட் கட்டண அதிருப்தியாளர்களுக்காக லட்டு வழங்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது, பக்தர்களுக்கு ‘அல்வா’ கொடுக்கும் செயலே
தஞ்சை கோயில் குடமுழுக்கில் கலந்து கொண்ட ஓர் அரசியல்வாதி: ஒரு நடிகர்!
அரசின் சார்பில் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் கலந்து கொள்ளவில்லை. முதல்வரோ, துணைமுதல்வரோ இங்கிருக்கும் செண்டிமெண்ட்டை வைத்து மூச்சுக்கூட விடவில்லை.
‘ஸ்ரீராம் ஜென்மபூமி திரத் ஸ்சேத்திரா’ அறக்கட்டளை: மோடி அறிவிப்பு!
இந்தியாவில் ஹிந்து, முஸ்லிம், சீக்கியம், கிறிஸ்தவம், புத்த மதம், பார்சி அல்லது ஜெய்ன் அனைவரும் ஒரு குடும்பத்தின் அங்கம். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வளர்ச்சி அவசியம்.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
சென்னை திருவான்மியூரில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷே வைபவத்தைக் கண்டு களித்து, இறையருள் பெற்றனர்.
கோலாகலமாக நடைபெற்ற தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு!
ஆயிரம் ஆண்டு பழைமையான தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதம் என ஆகம முறைப்படி இன்று காலை 9.30க்கு குடமுழுக்கு நடைபெற்றது.
தஞ்சை கும்பாபிஷேகம்: மந்திரம் சொல்ல எதிர்ப்பு! சினிமா இயக்குநர் கைது!
இயக்குனர் கௌதமன் போராட்டம் செய்ய தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இன்று (05.2.2020) ஜெய ஏகாதசி! விரதத்தால் விளையும் பலன்!
அவர்கள் தன்னையறியாமலே ஜெயா ஏகாதசியை அனுஷ்டித்தனர்.