
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்தாரா வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது. பொறியாளர் கே ஸ்ரீகுமார் அனைவரையும் வரவேற்றார்.
பொன் கருணாநிதி தாளாளர் பாரதியார் மெட்ரிக் பள்ளி எழுமலை, மாதவன், நிர்வாகி, சிற்பவானந்த ஆசிரமம் ,தேனி. சுவாமி ஞான சிவானந்த தலைவர் தத்வானந்த ஆசிரமம், திண்டுக்கல், சுவாமி சமானந்தர் தலைவர் சுவாமி சித்பவானந்த ஆசிரமம் தேனி சுவாமி பரமானந்தர் விவேகானந்தர் மேல்நிலைப்பள்ளி திருவேடகம். சங்கர சீதாராமன் நிர்வாக இயக்குனர் விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் லிமிடெட், மருத்துவர் டி. ராமசுப்பிரமணியன், இல அமுதன் ,
பக்தவச்சலம் , வைதீக சமாஜத்தின் தலைவர் ஸ்ரீதர் சாஸ்திரிகள், தமிழ்நாடு பிராமண சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் நடராஜன், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முள்ளிப்பள்ளம் கிளையின் ஆசிரியர் வீரமணிகண்டன், உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டனர். ஆச்சாரிய சுவாமிகளின் அருளுரை நூலை சுவாமி சமானந்தர் வெளியிட விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் சங்கர சீதாராமன் பெற்றுக் கொண்டார்.
மேலும், மகா பெரியவாளின் கருணையை விளக்கும் மைத்ரி என்ற புத்தகம், தெய்வத்தின் குரல் கருத்து படங்களுடன் தினசரி தினசரி பெரியவா தியானம் என்ற புத்தகம், காஞ்சி முனிவர் நினைவுக்கதம்பம் என்ற புத்தகம் பாரதிய சமுதாய கட்டமைப்பின் ஆணிவேர் என்ற புத்தகம் வந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற ரா கணபதி பற்றிய புத்தகம் ஆகியவை வெளியிடப்பட்டது. ஆசிரியர் வேதா டி ஸ்ரீதரன் புத்தகத்தினை பற்றி எடுத்துரைத்தார்.
அனைவருக்கும் துறவியர்களின் பிரசாதம் வழங்கப்பட்டது. மேற்படி புத்தகங்கள், பொறியாளர் கே ஸ்ரீகுமார் 94431 51258 பெற்றுக் கொள்ளலாம்.





