பரமன் அளித்த பகவத் கீதை (18): பாஹ்லீகன்

bhagavat githa series - 2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

பகவத்கீதை பகுதி 18
மகாபாரதக் கதை

ஆதிபர்வம் -3 – பாஹ்லீகன்

பிரதீபாவின் மகன் சந்தனு என சென்ற பகுதியில் பார்த்தோம். பிரதீபாவுக்கு தேவாபி, சந்தனு, பாஹ்லீகன் என மூன்று மகன்கள். தேவாபி வெளியில் தெரியக்கூடிய வகையில் சரும நோய் உடையவராய் இருந்தார். எனவே அவர் அரசப் பதவிக்குத் தகுதியற்றவராக ஆனார். எனவே அவர் காட்டிற்கு, தவம் செய்யச் சென்றுவிட்டார். சந்தனு அரசரானார். அவரது தம்பி பாஹ்லீகன் தன்னுடைய மாமன் நாட்டிற்குச் சென்ற் உ அங்கு அரசரனார்.. அவருடைய தேசம் இந்தியாவிற்கு வடமேற்கில் இருந்தது. அதனைத் தற்போதைய பாரசீகம் (ஈரான்) எனச் சொல்லுகிறார்கள்.

குருக்ஷேத்திரப் போரில், பாஹ்லீகன் வம்சத்தினர் பெரும்பாலும் கௌரவர்களின் பக்கம் நின்று போரிட்டனர். பாஹ்லீகனின் மகனான சோமதத்தன், அவரின் மகன் பூரிஸ்ரவஸ் போன்றோர் இந்தப் பிரிவில் முக்கியமானவர்கள். பாஹ்லீகர்கள் காந்தாரர்கள், காம்போஜர்கள் போன்ற பிற வடமேற்குப் பகுதி அரச குலங்களுடன் இணைந்து குறிப்பிடப்படுகிறார்கள்.

பூரிஸ்ரவசை சாத்யகி போரில் கொல்கிறார். சோமதத்தனையும் சாத்யகி கொன்றதாக துரோண பர்வத்தில் செய்தி இடம்பெறுகிறது. பின்னாளில் யாதவர்கள் ஆழிப்பேரலையால் அழியும்போது சாத்யகி பூரிஸ்வரசைக் கொன்றா செய்தி மீண்டும் வருகிறது.

சந்தனு

இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன் தனது வாழ்நாளில் சேமித்த புண்ணியங்களுக்காக சொர்க்கத்தில் இருக்க தேவர்களால் அனுமதிக்கப்பட்டார். இந்திர சபையில் தேவர்களுக்குச் சமமாக அமர்ந்து அப்ஸரக் கன்னிகைகளின் நடனங்களை கண்டு ரசிக்கவும், கந்தர்வர்களின் கான இசையை கேட்கவும், சுர பானத்தை பருகியும், எதையும் தரவல்ல காமதேனு பசுவிடம், கற்பக மரம் மற்றும் சிந்தாமணிக் கல் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு நாள் கங்கை இந்திரனின் சபைக்கு வந்தாள் அப்போது மெல்லிய தென்றல் வீசவே, அவளது மேலாடை சற்று விலகி அவளது மார்பு அழகைக் காட்டியது. கூடியிருந்த தேவர்கள் மரியாதைக்காக தலையை குனிந்தனர், ஆனால் மகாபிஷக் வெட்கமின்றி கங்கையின் அழகை வியந்து கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் கங்கையும் சற்று நிலை தடுமாறித்தான் போனாள். இதைக் கண்ட இந்திரன் இருவரையும் எச்சரித்து மகாபிஷக்கை உடனடியாக தேவர்களின் நகரான அமராவதியை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான். கங்கையை அழைத்து மகாபிஷக்கின் இதயத்தை சாந்தப்படுத்தி வந்தால் மீண்டும் அமராவதிக்கு வரலாம் என்று கூறிவிட்டார்.

மகாபிஷக் பிரதிபனுக்கு மகனாகப் பிறந்தார். சந்தனுவுக்கு மகுடம் சூட்டப்பட்டது. துறவு மேற்கொண்ட பிரதிபன் ஒரு நாள் நதிக்கரையில் தியானம் செய்து கொண்டிருந்தபோது கங்கை வந்து அவனுடைய வலது தொடையில் அமர்ந்தாள். பெண்ணே நீ என் வலது தொடையில் அமர்ந்துவிட்டாய் அதனால் மகளுக்கு சமமானவளாகிறாய், இடது தொடையில் அமர்ந்திருந்தால் மனைவியாவாய். (திருமணத்தின் போது மணப்பெண்ணை இடது பக்கம் அமரச்செய்து மங்கல நாண் அணிவிக்கிற நடைமுறை இன்றும் இந்தியாவில் நிலவுகிறது.) ஒரு மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது தந்தையின் கடமை உன் விருப்பம் என்ன? நான் உங்கள் மகன் சந்தனுவை மணம் முடிக்க விரும்புகிறேன் என்றாள் கங்கை.

அப்படியே நடக்கும் என்று ஆசி வழங்கினார் பிரதிபன் சில நாட்களுக்குப் பிறகு தந்தையைக் காணவந்த சந்தனுவிடம் கங்கை என்ற அழகான பெண் உன்னை அணுகி திருமணம் செய்துகொள்ள விரும்புவாள், அவளது ஆசையை நிறைவேற்று அது தான் என் விருப்பமும் என்றார் பிரதிபன். விரைவிலேயே கங்கையும், சந்தனுவும் சந்தித்தனர். கங்கை ஒரு நிபந்தனை விதித்தாள்.

நான் என்ன செய்தாலும் என்னை எந்த கேள்வியும் கேட்கக் கூடாது, கேட்டால் உடனே போய்விடுவேன். கங்கை மீது காம வயப்பட்டிருந்த சந்தனு மறுமொழி சொல்லாமல் நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். கங்கை – சந்தனு திருமணம் நடந்து முடிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories