எதிராகப் பேசியதாக, இந்த நீதிபதியையும் பதவி நீக்க திமுக., தீர்மானம் கொண்டு வருமா?

annamalai bjp tn leader - 2026

தங்களுக்கு எதிராகப் பேசியதாகக்க் கூறி, இந்த நீதிபதியையும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருமா திமுக.,? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து மதத்தை குறிவைத்து தாக்குபவை திக., திமுக., : நீதிமன்றம் பளீச் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், உதயநிதி கூறியது அப்பட்டமான இன அழைப்பு, இந்து வெறுப்புப் பேச்சுதான் என்று நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், தங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், இந்த நீதிபதியையும் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவருவார்களா திமுக.,வினர் என்று பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் சமூகத் தளத்தில் பதிவு செய்த கருத்து…

மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, பாஜக-வின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தேசியப் பொறுப்பாளரான திரு. அமித் மால்வியா அவர்களுக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிரான ஊழல் நிறைந்த திமுக அரசால் பதிவு செய்யப்பட்ட பழிவாங்கும் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துள்ளது.

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்த திரு. உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய வெறுப்புப் பேச்சு குறித்து கேள்வி கேட்பதோ அல்லது அதற்குப் பதிலளிப்பதோ ஒரு குற்றச் செயல் ஆகாது என்றும், அது சட்ட செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.

முக்கியமாக, திமுக மற்றும் திராவிடர் கழகம் ஆகியவை இந்து மதத்தின் மீது கொண்டுள்ள நீண்டகால விரோதப் போக்கையும், கடந்த நூறு ஆண்டுகளில் நடந்த இத்தகைய தாக்குதல்களையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

வெறுப்புப் பேச்சைத் தொடங்கியவர் மீது தமிழ்நாட்டில் எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படாமல் அவர் தப்பித்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்வினையாற்றியவர்கள் அல்லது கேள்வி எழுப்பியவர்கள் திமுக அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற அப்பட்டமான அநீதியையும் நீதிமன்றம் பதிவு செய்தது.

நீதி வென்றுள்ளது. உண்மையை வழக்குத் தொடர முடியாது, திமுக-வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் நாகரிக நம்பிக்கையை அணைத்துவிடவும் முடியாது. திமுக மற்றும் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நீதிபதி ஸ்ரீமதி அவர்களுக்கும் எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவார்களா?


kadeswara subramaniam hindu munnani - 2026

உதயநிதி பதவி விலக வேண்டும்!

சனாதனம் குறித்த பேச்சுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், உதயநிதி பதவி விலக வேண்டும் என்று, இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கை:
 
சனாதனம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனாதனத்தை அதாவது இந்து தர்மத்தை டெங்கு, மலேரியா,கொசு போல ஒழிப்போம் என பேசினார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் மாளவியா சமூக வலைதளங்களில் “சனாதனத்தை பின்பற்றும் 80 சதவீத இந்துக்களை கொலை செய்ய உதயநிதி  தூண்டுகிறாரா?” என பதிவிட்டதற்காக அவர் மீது திருச்சி மாவட்ட காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கினை ரத்து செய்யக்கோரி அமித் மாளவியா தொடர்ந்த வழக்கில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
 
நீதியரசர் ஸ்ரீமதி அவர்கள் பாஜக நிர்வாகி அமித்மாளவியா மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்தார். மேலும் இந்த வழக்கு குறித்து அமித்மாளவியா உதயநிதிக்கு எதிராக போராட்டத்தை தூண்டவில்லை,  உதயநிதியிடமிருந்து பதிலை மட்டுமே கேட்டுள்ளார்.
 
வெறுப்புப் பேச்சை பேசும் உதயநிதி போன்றவர்கள் தப்பி விடுகின்றனர். ஆனால் அதற்கு எதிர் கேள்வி கேட்கும் அமித்மாளவியா  போன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. நீதிமன்றம் இதனை வேதனையுடன் பார்க்கிறது.
 
ஒழித்தல் என்ற வார்த்தை “ஏற்கனவே இருக்கும் ஒன்றை இருக்கக் கூடாது” என்கின்ற பொருளை தருகிறது. சனாதனம் இருக்கக் கூடாது என்றால் அதைப் பின்பற்றும் மக்களும் இருக்கக்கூடாது என்று தானே பொருள்படுகிறது.  சனாதனத்தை பின்பற்றும் ஒரு குழுவை இருக்கக் கூடாது என்றால் அது இனப்படுகொலை, கலாச்சார படுகொலையைக் குறிப்பதாகும் என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
 
தொடர்ந்து இந்து மதத்தை திமுக குறிவைத்து தாக்கிப்பேசி வருவதற்கு  நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுக்க முழுக்க உதயநிதியின் வன்மமான  இந்து விரோத பேச்சையே கண்டித்து உள்ளது.
 
நீதிமன்ற தீர்ப்பின் கண்டனத்திற்கு தார்மீக பொறுப்பேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என தமிழகத்தில் உள்ள இந்து மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
ஆனால் திமுகவில் தார்மீகம், மாண்பு,  நீதித்துறைக்கு – அதன் தீர்ப்புக்கு  மதிப்பளிப்பது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
 
நீதியரசர் ஸ்ரீமதி அவர்களை பதவி நீக்கம் செய்யக்கோரி பாராளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தீர்மானம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. திமுகவின் சட்டவிரோத நடவடிக்கைகளை தோலுரிக்கும் நீதிபதிகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திமுக கூனி குறுகி ஓடி ஒளிந்து கொண்டு நீதித்துறையையே குற்றம் சாட்டுவது வழக்கமான ஒன்றுதான்.
 
ஆனால் உதயநிதியின் பேச்சுக்கு இந்து மக்கள் வரும் தேர்தலில்   தமிழகத்தில் திமுகவை நிச்சயம் வீழ்த்துவார்கள். மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை பெரும்பான்மையான மக்கள் வரவேற்கின்றனர்..

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories