கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம்
தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில் பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது நேற்று சுவாதி நடசத்திர நாளில் 16 வைகயான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம்,விஷ்ணு சூக்தஹோமம்,மகாலட்சுமி ஹோமம் மற்றும் 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேங்களும் நடைபெற்றது பெருமாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீ நரஸிம்ஹ புஷ்கரணியையும் திருக்கோவிலையும் தீர்த்தவலம் வருதல் நடைபெற்றது
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும் ,ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் ,பொதுமக்களும் செய்திருந்தனர்
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை
Popular Categories



