சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

sabarimala aiyappa concluding pooja - 2026

உலக பிரசித்தி பெற்ற கேரளா சபரிமலையில் சுவாமி ஐயப்பனின் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா வரும் ஏப்.2-ந்தேதி தொடங்குகிறது.

பங்குனி உத்திரம் ஆராட்டு 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. மேஷ
விஷு பண்டிகை 14-ந் தேதி கொண்டாப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி வரும் ஏப்ரல் 1 மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

2-ந் தேதி காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். இந்தத் திருவிழா 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்ஸவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும். ஏப்ரல் 10-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் ஐயப்பன் பள்ளிவேட்டை நடக்கிறது.

விழாவின் இறுதி நாளான 11-ந் தேதி பகல் 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும்.

சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு 18-ந் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். விஷு பண்டிகை 14-ந் தேதி கொண்டாப்படுகிறது.

சபரிமலையில் கடந்த மாத பூஜையின் போது பக்தர்கள் 18-ம் படி ஏறி வந்தவுடன் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இனி வரும் பூஜை நாட்களிலும் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories