தடுப்பூசி போட்டால் தான் ஊதியம்: திருப்பதி தேவஸ்தானம்!

Published:

vaccine - 2026

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ஜூன் மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை – திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 14,000 ஊழியர்களுக்கு தடுப்பூசி போட நிர்வாகம் தீவிரம்காட்டி வருகிறது. தடுப்பூசி போடாமல் அலட்சியமாக உள்ளதால் அதிரடி நடவடிக்கை எடுக்க திருமலை – திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே இம்மாத ஊதியத்தை வங்கியில் செலுத்த செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை 7ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டால் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்படும் என தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related articles

Recent articles

spot_img