
அங்கணிரண்டும் கொண்டு..எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ..ஆறாயிரப்படி
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு என்று , எம்பெருமான் தன் திருக்கண்களால் ஒரே சமயத்தில் கோபத்தையும் குளிர்ச்சியையும் எப்படி கொடுக்க முடியும் என்று ஒரு விசாரம் .
இதற்கு பட்டர் தெரிவிக்கும் அழகான விளக்கம் .
ஒரு சிங்கம் யானையோடு சண்டையிடும் வேளையிலும் தன்னுடைய குட்டிக்கு பால் உண்ணலாம்படி இருக்கும். அதைப்போல் அங்கண் இரண்டும் கொண்டு என்று எதிரிகளுக்குக் கனலும் அடியார்களுக்கு கிருபையும் பொழிவான் அன்றோ! என்று சாதித்தருளினார்.
சீற்றத்தோடு அருள் பெற்ற திருவாய்மொழியில் 3.6.6
இதே விஷயம் பேசப்படுகிறது
அங்கு இது எம்பெருமானார் வார்த்தையாக ஈட்டு ஸ்ரீசூக்தியில் நோக்கலாம்.
இங்கு ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வான் பால் க்ருபையும் ஹிரணியன் மேல் சீற்றமும் கொண்டது நினைக்கத்தக்து.
குறிப்பு. எம்பெருமானார் வார்த்தையைப் பின்பற்றியே ஸ்ரீ பட்டரின் சம்வாதம் என்று கொள்ளலாம்
- வானமாமலை பத்மனாபன்