ipl 2022 - 2026

IPL 2022: டெல்லி vs சன்ரைசர்ஸ்

விளையாட்டு இந்தியா லைஃப் ஸ்டைல்
ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – டெல்லி vs சன்ரைசர்ஸ்
– கே.வி. பாலசுப்பிரமணியன் –

நேற்று, மே ஐந்தாம் நாள் டெல்லி, சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையே மும்பை ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 50ஆவது போட்டி நடந்தது. டெல்லி அணி (207/3, டேவிட் வார்னர் 92, போவல் 67, புவனேவர் குமார், அப்பாட், கோபால் தலா ஒரு விக்கட்) சன்ரைசர்ஸ் அணியை (186/8, பூரன் 62, மர்க்ரம் 42, கலீல் அகமது 3/30) வென்றது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி டெல்லி அணியை மட்டையாடச் சொன்னது. டெல்லி அணியில் இன்று ப்ருத்வி ஷா, அக்சர் படேல், சேதன், முஸ்டாஃபிசுர் ஆகியோர் ஆடவில்லை. அவர்களுக்குப் பதிலாக மன்தீப் சிங், கலீல் அகமது, ரிபால் படேல், நோர்ட்ஜெ ஆகியோர் ஆடினர். சன்ரைசர்ஸ் அணியில் ஜேன்சன், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆடவில்லை.

மன்தீப் சிங் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வந்தார், ஆனால் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார். மிட்சல் மார்ஷ் (10 ரன்), ரிஷப் பந்த் (26) விரைவில் ஆட்டமிழந்தனர். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர், ஆட்டமிழக்காமல், 58 பந்துகளில் 92 ரன் அடித்தார். போவல் வார்னருடன் துணை நின்று 35 பந்துகளில் 67 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எனவே இருபது ஓவர் முடிவில் டெல்லி அணி மூன்று விக்கட் இழப்பிறகு 207 ரன் எடுத்தது.

208 ரன் என்ற இமாலய இலக்கை அடைய ஆட்டத்தைத் தொடங்கிய சன்ரைசர்ஸ் அணி முதல் ஏழு ஓவரில் மூன்று விக்கட்டுகளை இழந்து 37 ரன் மட்டுமே எடுத்தது. எய்டன் மர்க்ரம் (42 ரன்), நிக்கோலஸ் பூரன் (62 ரன்) இருவரைத் தவிர பிற மட்டையாளர்கள் நிலைத்தும் நிற்கவில்லை; ரன் எடுக்கவில்லை.

சன்ரைசர்ஸ் அணியின் ரன்ரேட் டெல்லி அனியின் ரன்ரேட்டைவிட இன்னிங்ஸ் முழுவது குறைவாகவே இருந்தது. எனவே அந்த அணி 20 ஓவரில் 186 ரன் மட்டுமே எடுத்து டெல்லி அணியிடம் தோற்றுப்பொனது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.