
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 7 – 1996 போட்டி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
1996 கிரிக்கெட் உலகக் கோப்பை “வில்ஸ் உலகக் கோப்பை 1996” என அழைக்கப்பட்டது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஏற்பாடு செய்த ஆறாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகும். இது 1996 பிப்ரவரி 14 முதல் மார்ச் 17 வரை பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்றது. 17 மார்ச் 1996 அன்று பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை இந்த போட்டியை வென்றது.
1996 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் கல்கத்தா, டெல்லி, மொகாலி, பெங்களூர், மெட்ராஸ், ஹைதராபாத், கட்டாக், குவாலியர், விசாகப்பட்டினம், பாட்னா, புனே, மும்பை, அகமதாபாத், வதோதரா, ஜெய்ப்பூர், நாக்பூர், டெல்லி ஆகிய மைதானங்களில் நடைபெற்றது.
இந்தியாவில் உள்ள இடங்கள்
மேலும் பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, பெஷாவர், பைசலாபாத், குஜ்ரன்வாலாஆகிய மைதானங்களில் நடைபெற்றது. இலங்கையில் கொழும்பு-கண்டியில் உள்ள மைதானங்களில் நடைபெற்றது.
போட்டி தொடங்கும் முன்னரே சர்ச்சைகள் ஏற்பட்டன. 1996 ஜனவரியில் கொழும்பில் உள்ள மத்திய வங்கி மீது விடுதலைப் புலிகளால் குண்டுவீசித் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் தங்கள் அணிகளை இலங்கைக்கு அனுப்ப மறுத்துவிட்டன. இலங்கை, அணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கப்படும் என உறுதி அளித்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை மைதானங்கள் பாதுகாப்பானது எனச் சொன்னது. ஒருவேளை அணிகள் இலங்கைக்கு விளையாடச் செல்ல மறுத்தால் இலங்கை அணி வெற்றிபெற்றதாகக் கருதப்படும் என அறிவித்தது. இந்த முடிவின் விளைவாக, போட்டி தொடங்கும் முன்பாகவே இலங்கை கால் இறுதிக்குத் தகுதி பெற்றது.
மொத்தம் 12 அணிகள் விளையடின. இவை இரண்டு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டன. குரூப் A பிரிவில் இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாபே, கென்யா அணிகள் விளையாடின. குரூப் B பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள், நெதர்லாந்து அணிகள் விலையாடின.
குரூப் A பிரிவில் காலிறுதிக்கு இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா, மேற்கு இந்தியத்தீவுகள் அணிகள் தேர்வாயின. குரூப் B பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தேர்வாயின.
அரையிறுதிக்குள் இலங்கை, இந்தியா மற்றும் மேற்கு இந்தியத்தீவுகள், ஆஸ்திரேலியா அணிகள் நுழைந்தன. இதில் பெங்களூருவில் நடந்த இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
அரையிறுதி ஆட்டங்களில் இந்தியாவை இலங்கை அணியும், மேற்கு இந்தியத்தீவுகள் அனியை ஆஸ்திரேலியாவும் வென்று இறுதிப் போட்டிக்கு வந்தன. லாகூரில் நடந்த அந்த இறுதிப் போட்டியில் இலங்கை 7 விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த உலகக் கோப்பையில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்ட்ன. கென்யாவுக்கு எதிராக, இலங்கை 5 விக்கெட்டுக்கு 398 ரன்கள் எடுத்தது, இது ஏப்ரல் 2006 வரை ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அதிகபட்ச அணி ஸ்கோர் என்ற புதிய சாதனையாகும்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக கேரி கிர்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 188 ரன்கள் எடுத்தார். 2015 கிரிக்கெட் உலகக் கோப்பையில் முறையே 215 மற்றும் 237 ரன்களை எடுத்த மேற்கிந்தியத் தீவுகளின் முதலில் கிறிஸ் கெய்ல் மற்றும் பின்னர் மார்ட்டின் குப்டில் ஆகியோரால் முறியடிக்கப்படும் வரை, இது எந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இதுவரை இல்லாத அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக மாறியது.
வினோத் காம்ப்ளியின் கண்ணீர்
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் 110,000 பேர் பார்வையாளராக இருந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிரான முதல் அரையிறுதியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் மலிவாக இழந்த பிறகு, அரவிந்த டி சில்வா தலைமையில் எதிர் தாக்குதலைத் தொடங்கியது.
இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது துரத்தலை நம்பிக்கையுடன் தொடங்கியது, ஆனால் சச்சின் டெண்டுல்கரின் இழப்புக்குப் பிறகு, இந்திய பேட்டிங் ஆர்டர் சரிந்தது. 35வது ஓவரில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கூட்டத்தின் சில பகுதியினர் பழங்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை மைதானத்தில் வீசத் தொடங்கினர்.
கூட்டத்தை அமைதிப்படுத்தும் முயற்சியில் வீரர்கள் 20 நிமிடங்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். வீரர்கள் விளையாடத் திரும்பியபோது, அதிகமான பாட்டில்கள் மைதானத்தில் வீசப்பட்டன, மேலும் ஸ்டாண்டில் தீ வைக்கப்பட்டது. போட்டி நடுவர் கிளைவ் லாயிட் இந்த போட்டியை இலங்கை வென்றதாக அறிவித்தார். வினோத் காம்ப்ளி கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறியது இன்றைக்கும் மறக்கவியலாது.
சச்சின் டெண்டுல்கர் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 523 ரன்கள் அடித்தார். அவர் இரண்டு (127 & 137) செஞ்சுரிகளையும் அடித்தார். ஆஸ்திரேலியாவின் மார்க் வா மூன்று செஞ்சுரிகளை அடித்தார்