T20 WC 2024: லீக் சுற்று இறுதி ஆட்டங்களில்!

t20 worldcup - 2026
#image_title

டி20 உலகக் கோப்பை ஆட்டங்கள் – லீக் சுற்று – 16 ஜூன் முதல் 17 ஜூன் வரை

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

அட்டவணை

(லீக் சுற்று ஆட்டங்களின் முடிவு வரை)

குரூப் Aகுரூப் Bகுரூப் Cகுரூப் D
இந்தியா – 7

அமெரிக்கா ஐக்கிய நாடுகள் – 5

பாகிஸ்தான் 4

கனடா – 3

அயர்லாந்து 1

ஆஸ்திரேலியா 8

இங்கிலாந்து 5

ஸ்காட்லாந்து 5

நமீபியா 2

ஓமன் 0

மேற்கு இந்தியத் தீவுகள் 8

ஆப்கானிஸ்தான் 6

நியூசிலாந்து 4

உகாண்டா 2

பாபுவா நியூகினியா 0

தென் ஆப்பிரிக்கா 8

வங்கதேசம் 6

இலங்கை 3

நெதர்லாந்து 2

நேபாளம் 1

லீக் சுற்றின் கடைசி ஐந்து ஆட்டங்கள் 16ஆம் தேதியும் 17ஆம் தேதியும் நடந்தன. 16.06.2024 அன்று லாடர்ஹில் மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் அயர்லாந்து (106/9) பாகிஸ்தான் (18.5 ஓவரில் 111/7) அணிகள் விளையாடின. அதில் பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 107 ரன் என்ற இலக்குடன் இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி சற்று திணறியது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாபர் ஆசம் மற்றும் ஷாஹின் ஷா அஃப்ரிடி இருவரின் முயற்சியால் அந்த அணி 18.5 ஓவரில் ஏழு விக்கட்டுகள் இழப்பிற்கு 111 ரன் அடித்து ஆறுதல் வெற்றிபெற்றது.

அதே நாளில் கிங்க்ஸ்டனில் வங்கதேசம் (106) நேபாளம் (19.2 ஓவரில் 85) அணிகளுக்கிடையில் நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, சூப்பர் 8இல் தனது இடத்தை உறுதிசெய்தது.

அன்றைய தினத்தின் மூன்றாவது ஆட்டம் கிரோஸ் ஐலட்ஸ் மைதானத்தில் இலங்கை (201/6) நெதர்லாந்து (16.4 ஓவரில் 118) அணிகளுக்கிடையே நடந்தது அதில்  இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

17.06.2024 அன்று இரண்டு ஆட்டங்கள் நடபெற்றன. முதல் ஆட்டம் தரௌபாவில் பாப்புவா நியுகினியா (78) நியூசிலாந்து (12.2 ஓவரில் 79/3) அணிகளுக்கிடையே நடந்தது அதில்  நியூசிலாந்து அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

அதே நாள் கிரோஸ் ஐலட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் (218/5) ஆஃப்கானிஸதான் (16.2 ஓவரில் 114) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் மேற்கு இந்தியத்தீவுகள் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சூப்பர் 8

 குரூப் 1குரூப் 2
Aஇந்தியாஅமெரிக்கா
Bஆஸ்திரேலியாஇங்கிலாந்து
Cஆஃப்கானிஸ்தான்மேற்கு இந்தியத் தீவுகள்
Dவங்கதேசம்தென் ஆப்பிரிக்கா

சூப்பர் 8 ஆட்டங்கள் இன்று 19 ஜூன் முதல் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் விளையாடுகின்றன. 20 ஜூன் 2024 அன்று இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடுகின்ற ஆட்டமும் ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகள் ஆட்டமும் நடைபெறுகின்றன. அதன் பின்னர் பின்வரும் ஆட்டங்கள் நடபெறுகின்றன.

இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா – 21.06.2024

அமெரிக்கா – மேற்கு இந்தியத் தீவுகள் – 21.06.2024

இந்தியா – வங்கதேசம் – 22.06.2024

ஆஃப்கானிஸ்தான் – ஆஸ்திரேலியா- 22.06.2024

அமெரிக்கா – இங்கிலாந்து – 23.06.2024

மேற்கு இந்தியத் தீவுகள் – தென் ஆப்பிரிக்கா – 23.06.2024

இந்தியா – ஆஸ்திரேலியா – 24.06.2026

ஆஃப்கானிஸ்தான்– வங்கதேசம் – 24.06.2024

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

Topics

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Entertainment News

Popular Categories