உலகச் சாம்பியன் தொம்மராஜு குகேஷ்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
2024ஆம் ஆண்டிற்கான செஸ் உலகச் சாம்பியன்ஷிப்போட்டியில் இந்தியாவின், தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்அவர்களை வென்று பட்டம் பெற்றார்.
டி. குகேஷ் அல்லது தொம்மராஜு குகேஷ்(Dommaraju Gukesh) 2006ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் நாள் பிறந்தவர். இவர் ஓர் இந்தியசதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆவார். குகேஷ் சென்னையில் பிறந்தார். இவரது குடும்பத்தினர்ஆந்திரப் பிரதேசம், கோதாவரி வடிநிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தந்தை ரஜனிகாந்த்ஒரு காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்; தாயார் பத்மா ஒரு நுண்ணுயிரியலாளர்ஆவார். குகேஷ் தனது ஏழு வயதில் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டார். சென்னை மேல் அயனம்பாக்கத்தில்உள்ள வேலம்மாள் வித்தியாலயத்தில் படித்தவர்.
குகேஷ் 2015ஆம் ஆண்டு 9 வயதிற்கு உட்பட்டோருக்கானஆசியப் பள்ளிகளின் சதுரங்க வாகைப் போட்டியில் வென்றார், 2018இல் 12 அகவைக்குட்பட்டோருக்கானஉலக இளையோர் சதுரங்க வாகையை வென்றார். அத்துடன் 2018 ஆசிய இளையோர் வாகைப் போட்டிகளில்,12 வயதிற்குட்பட்டோருக்கான தனிநபர் மின்வல்லு, விரைவுவல்லு, தனிநபர் மரபு வல்லு வடிவங்களில்(U-12 team rapid and blitz,and the U-12 individual classical formats)ஐந்து தங்கப் பதக்கங்களையும் வென்றார். மார்ச் 2018இல் 34-ஆவது கேப்பல்-லா-கிராண்டேதிறந்த சுற்று பன்னாட்டுப் பேராதன் பட்டத்திற்கான தேவைகளை நிறைவு செய்தார்.
குகேஷ் 2019 சனவரி 15 அன்று 12 ஆண்டுகள்,7 மாதங்கள், 17 நாட்களில் வரலாற்றில் இரண்டாவது இளைய சதுரங்கப் பேராதன் (கிராண்ட் மாஸ்டர்)ஆனார். 2021 சூனில், யூலியசு பேயர் சேலஞ்சர்சு (Julius Baer Challengers ChessTour, Gelfand Challenge) சுற்றில், 19 இல் 14 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றார்.2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், குகேஷ் 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியை 8/8என்ற நேர்த்தியான மதிப்பெண்களுடன் தொடங்கினார், 8-ஆவது போட்டியில் இந்தியா-2 அணியைதரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவைத் தோற்கடிக்க உதவினார். குகேஷ் 11 க்கு9 மதிப்பெண்களுடன் முடித்து, முதலாவது பலகையில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
செப்டெம்பர் 2022இல், குகேஷ் முதற்தடவையாக2700 என்ற தரவுப்புள்ளியைத் (2726) தாண்டி, வெய் யி, அலிரெசா பிரூஜா ஆகியோருக்குப்பிறகு 2700 தரவுப்புள்ளியைக் கடந்த மூன்றாவது இளைய வீரராக ஆனார். அக்டோபர் 2022 இல்,ஏம்செஸ் விரைவு வல்லுப் போட்டியில் உலக வாகையாளரான மாக்னசு மேக்னஸ் கார்ல்சனைவீழ்த்திய இளைய வீரர் ஆனார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள்விறு விறுப்பாக சிங்கப்பூரில் நடைபெற்றன. இந்த போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர்குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின் இருவரும் விளையாடி வந்தனர். இந்த போட்டியில் யார் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைவெல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே சென்ற நிலையில், தமிழக வீரர்குகேஷ் வெற்றிபெற்றுள்ளார்.
14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப்போட்டியில் முதல் சுற்று போட்டியில் டிங்கும் மூன்றாவது சுற்று போட்டியில் குகேஷூம்வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற 4ஆவது சுற்றிலிருந்து 10ஆவது சுற்று வரைசமநிலையிலேயே முடிவடைந்தது. இதனையடுத்து, 11ஆவது சுற்று வரும் போது மூளைக்கு அதிகமாக வேலை கொடுத்து சிறப்பாக விளையாடியகுகேஷ் வெற்றிபெற்றார்.
அதனை தொடர்ந்து அடுத்த சுற்றான 12-வது சுற்றிலும்வெற்றிபெற்றார். அதன்பின் நேற்று நடைபெற்ற 13ஆவது சுற்றில் இருவரும் தலா 6.5 என்ற புள்ளியைபெற்றுக்கொண்ட நிலையில், 13ஆவது சுற்றுமே சமநிலையில் தான் முடிந்தது. எனவே, இருவரும்சமநிலையான புள்ளிகளை பெற்றுள்ள காரணத்தால் 14ஆவது சுற்றில் வெற்றிபெறுபவர் தான் வெற்றியாளர்எனவும் நேற்று கூறப்பட்டது.
இந்த நிலையில், 14ஆவது சுற்றில் போட்டி தொடங்கி2 மணி நேரம் முடிவடைந்த நிலையில் இந்த சுற்றும் டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த காரணத்தால் நாளை டை பிரேக்கர் முறைப்படி சுற்றுநடைபெறவுள்ளது எனவும் சொல்லப்பட்டது. இந்த சூழலில். 14ஆவது சுற்றில் டிங்லீரெனை வீழ்த்திதமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். மிகவும் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்பட்டத்தை வென்றார் என்கிற சாதனையும் அவர் படைத்துள்ளார்.
ஆட்டம் நடைபெற்றபோது குகேஷ் விரைவாக காய்களைநகர்த்தியதால் அவரிடம் நிறைய நேரம் இருந்தது. கடைசி நேரத்தில் டிங் லீ ஒரு தவறு செய்தார்.குகேஷ் அதனைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார். ஆட்டம் முடிந்ததும் குகேஷ் ஆனந்தத்தில்கண்ணீர் விட்டது மனதைத் தொடும் அளவில் இருந்தது. அதன் பின்னர் தன்னுடைய வழக்கம்போலகாய்களை போர்டில் முறைப்படி அடுக்கிவிட்டு குகேஷ் எழுந்தார்.
“Thiru. GukEsh avarGaL 2024-aam varushaththiRkaana ulaga chess champion pOttiyil inthiyaavin, thamizhagaththaich chErntha ‘GukEsh’ avarGaL Cheenavin grand master ‘ Mr. Dinklin’ avarGaLai veezhththi veRRi adainthu vittaar; iLam vayathilEyE veRRiadainthu vittaar. Intha veRRi avarukkukum, nam ThamizhagaththiRkum kidaiththa veRRiyE aagum allavaa? Sabaash.” – “M.K. Subramanian.”, B.Com, LL.B.”
“Inthiyaavin veRRi ovvoru Inthiyanukku kidaiththu vittathu pOlavE ovvru inthiyanum karuthuGinRaan. Ahaa!!! – “M.K.Subramanian.”