IPL 2025: வெற்றிப் பாதையில் மும்பை அணி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – மும்பை vs டெல்லி
வான்கடே மைதானம், மும்பை – 21.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணி (180/5, சூர்யகுமார் யாதவ் 73, திலக் வர்மா 27, ரியன் ரிக்கிள்டன் 25, நமன் தீர் 24, வில் ஜேக்ஸ் 21, முகேஷ் குமார் 2/48, சமீரா, ரஹ்மான், குல்தீப் தலா ஒரு விக்கட்), டெல்லி கேபிடல்ஸ்  அணியை (18.2 ஓவர்களில் 121, சமீர் ரிஸ்வி 39, விபின் நிகம் 20, அஷுதோஷ் ஷர்மா 18, கே.எல். ராகுல் 11, மிட்சல் சாண்ட்னர் 3/11, பும்ரா 3/12, போல்ட், தீபக் சாஹர், வில் ஜேக்ஸ், கர்ண் ஷர்மா தலா ஒரு விக்கட்) 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 5 ரன், 1 ஃபோர்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்கவீரரான ரியன் ரிக்கிள்டன் (18 பந்துகளில் 25 ரன், 2 சிக்சர்) வில் ஜேக்ஸ் (13 பந்துகளில் 21 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) உடன் இணைந்து அணியின் ஸ்கோரை நிலைப்படுத்தினார். அவருக்குப் பின் ஆட வந்த சூர்யகுமார் யாதவ் (43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்) இறுதிவரை ஆடி அனிக்கு வலு சேர்த்தார்.  

அவருக்குப் பின்னர் வந்த திலக் வர்மா (27 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (3 ரன்), நமன் தீர் (8 பந்துகளில் 24 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) என அடித்து ஆடியதால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது.

          181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் மட்டையாளர்கள் எவரும் நிலைத்து ஆடவில்லை. சமீர் ரிஸ்வீ (35 பந்துகளில் 39 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் விப்ராஜ் நிகம் (11 பந்துகளில் 20 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய இருவர் மட்டுமே சற்று பொறுப்போடு ஆடினர். மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் மிட்சல் சாண்ட்னர் மற்றும் பும்ரா அற்புதமாக பந்துவீசி தலா மூன்று விக்கட்டுகள் எடுத்தனர்.

டெல்லி அணியில் கே.எல். ராகுல், முதலில் விளையாட வரவில்லை. அந்த அணி பேட்டிங் செய்த போது அவர் தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் அவர் இன்று சோபிக்கவில்லை. இறுதியில் டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன் எடுத்து, அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. எனவே மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் நாலாவது இடத்திற்கு வந்துள்ளது. மும்பை, டெல்லி அணிகள் பஞ்சாப் அணியோடு தனது கடைசி ஆட்டங்களை ஆடும். அந்த இரண்டு ஆட்டங்களும் பிளேஆஃப் சுற்று எந்த அணி செல்லும் என்பதை முடிவு செய்யுமா எனப் பார்க்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories