T20 WC 2026: சிறிய அணிகள் சிறப்பான ஆட்டம்

icc t20 worldcup - 2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
இரண்டாம் நாள் – சிறிய அணிகள் சிறப்பான ஆட்டம்

          இன்று (08.02.2026) ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகள் சென்னையில் காலை 1100 மணிக்கும் இங்கிலாந்து நேபாள அணிகள் மும்பையில் மதியம் 0300 மணிக்கும் கடைசி ஆட்டத்தில் இலங்கை அயர்லாந்து அணிகள் இரவு 0700 மணிக்கும் விளையாடின.

நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி

          சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் பூவா தலையா வென்று ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. அந்த அணியின் குல்பதன் நயிப் 63 ரன் எடுத்தார். இரண்டாவதாக ஆடிய நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 183 ரன் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணியின் டிம் செய்ஃபெர்ட் 65 ரன்னும் கிளன் பிலிப்ஸ் 42 ரன்னும் அடித்தனர்.

நேபாள அணியின் சிறப்பான ஆட்டம்

          மும்பையில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் பூவா தலையா வென்று இங்கிலாந்து அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 184 ரன் எடுத்தது. ஜாகப் பெத்தேல் (55 ரன்), ஹாரி ப்ரூக் (53 ரன்), வில் ஜேக்ஸ் (ஆட்டமிழக்காமல் 39 ரன்) சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக ஆடிய நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 180 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. கடைசி ஓவரில் 10 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி இரண்டு பந்துகளில் 7 ரன் எடுக்கவேண்டிய நிலை; ஆட்டத்தை இந்த அளவிற்கு கொண்டு சென்றதற்காக நேபாள அணி பாராட்டப்படவேண்டும்.

அயர்லாந்து அணியின் சிறப்பான ஆட்டம்

          இலங்கை கொழும்புவில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் பூவா தலையா வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. இதனால் இலங்கை அணி முதலில் மட்டையாட வந்தது. 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 163 ரன் எடுத்தது. குசால் மெண்டிஸ் (56 ரன்), கமிந்து மெண்டிஸ் (44 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள். இரண்டாவதாக ஆடிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 143 ரன் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோஸ் அடேர் (34 ரன்), ஹாரி டெக்டர் (40 ரன்), லார்கன் டக்கர் (21 ரன்) சிறப்பாக ஆடினர். ஒன்பதாவது ஓவர் முதல் 17ஆவது ஓவர் வரை அயர்லாந்து இந்த ஆட்டத்தை வென்றுவிடு என்றே தோன்றியது. ஆனால் இலங்கை அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்களால் வெற்றி சாத்தியமானது.

          நாளை (09.02.2026) முதல் ஆட்டத்தில் கொழும்புவில் காலை 1100 மணிக்கு இத்தாலி ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் ஓமன், ஜிம்பாபே அணிகள் மதியம் 0300 மணிக்கு கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. மூன்றாவது ஆட்டத்தில், அகமதாபாத்தில் கனடா, தென் ஆப்பிரிக்கா அனிகள் விளையாடுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories