காங்கிரஸை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்!

Published:

pm modiji in parliament rajyasabha - 2026

தமிழில், குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் வகையில், பிப்.05 அன்று, பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய சக்தி வாய்ந்த உரையில், நல்லாட்சி, வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ந்த பாரதம் குறித்த தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை எடுத்துரைத்தார். நாடாளுமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், இந்தியாவின் எதிர்காலத்திற்கான வலுவான தலைமைத்துவத்தையும் உறுதியான வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கிறது.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இந்த மன்றத்தின் உயர்வான அவை, ஒருவகையிலே மாநிலங்களின் பிரதிநிதியாக விளங்குகிறது.  இன்று நடந்த விவாதங்களை, நுணுக்கமாக, நான் பார்த்தபோது, இதன் நிலை இன்னும் சற்று உயர்வாக இருக்க வேண்டும் என்று என் மனம் அவாவியது.  அவர்கள் தரப்பில் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், அவர்கள் பல ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள்.   அவர்கள் தரப்பில் விவாதங்ளின் தரம் இன்னும்கூட அதிகம் இருந்திருக்க வேண்டும்.  ஆனால், அவர்கள் இந்த வாய்ப்பையும் தவற விட்டார்கள்.  தேசம் இனி அவர்கள் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும்? 

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, நான் நேற்று ஒரு, மாண்புமிகு உறுப்பினர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  அவர் தன்னை அரசர் என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர்.  ஆனால், அவர், பொருளாதார, சீரற்றத்தன்மை பற்றி விவாதம் செய்தார்.  சொல்லுங்கள்.  தன்னை அரசராகவே கருதுபவர், அவர் பொருளாதார சமச்சீரற்ற நிலை பற்றி பேசினால், என்ன துரதிர்ஷ்டம், இப்படிப்பட்ட நாட்களையும் தேசம் காண வேண்டியிருக்கிறதே?

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, நம்முடைய டிஎம்சியின் நண்பர்கள் நிறைய விஷயங்களைச் சொன்னார்கள்.  சற்று நீங்களே உங்களை, கண்ணாடியிலே பார்த்துக் கொள்ளுங்கள்.  கருணையே இல்லாத அரசாங்கம், அராஜகத்துக்கு எத்தனை அளவுருக்கள் இருக்குமோ, அந்த எல்லா அளவுருக்களிலும், புதியபுதிய சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.   இங்கே நீங்களா உபதேசம் செய்கிறீர்கள்?  எந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்?   இப்படிப்பட்ட அரக்கத்தனமான அரசாங்கத்தால், அங்கே இருப்போரின் எதிர்காலம், இருளிலே மூழ்கிக் கொண்டிருக்கிறது.    ஆனால் இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.  அதிகார சுகத்தைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.  ஆனால் நீங்களா, இங்கே உபதேசம் செய்கிறீர்கள்?  ஊடுறுவல். 

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

உலகின் எத்தனையோ வளமையான நாடாக இருந்தாலும், தங்கள் நாட்டிலிருந்து, குடிமக்கள் அல்லாதவர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  நம்முடைய நாட்டிலே ஊடுறுவியிருப்பவர்களைக் காப்பாற்ற, நீதிமன்றங்களின் மீது அழுத்தம் அளிக்கப்படுகிறதே!!  என்னுடைய தேசத்தின் இளைஞர்கள் எப்படி இப்படிப்பட்டவர்களை மன்னிப்பார்கள்?  இவர்கள் ஊடுறுவல்காரர்களைக் காப்பாற்றுவதிலே முனைப்போடு இருக்கிறார்கள்!!   இந்த ஊடுறுவல்காரர்கள், என்னுடைய தேசத்தின் இளைஞர்களின் உரிமைகளைக் களவாடுகிறார்கள்.  அவர்களுடைய வாழ்வாதாரத்தைத் திருடுகிறார்கள்.  பழங்குடி மக்களின் நிலத்தைக் கவர்கிறார்கள்.  பெண்கள் சகோதரிகளின் வாழ்க்கையை அபாயம் சூழத் தொடங்கியிருக்கிறது.  ஆனால் இவர்களைப் பொறுத்தவரையில், பெண்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டால் அது பாட்டுக்கு நடக்கட்டும்.  அரசு இயந்திரங்கள் இதிலே ஒன்றும் செய்யாது. 

இவர்களா நமக்கு இங்கே உபதேசம் செய்கிறார்கள்?  இப்படிப்பட்ட கவலைதரும் அனைத்து விஷயங்களிலும், கண்ணை மூடிக்கொண்டு இருப்பவர்கள் தாம் இவர்கள்.  மதிப்புமிக்க இன்னுமொரு உறுப்பினர், நிறைய பேசிக் கொண்டிருந்தார்.  இவருடைய ஒட்டுமொத்த அரசும் சாராயத்தில் மூழ்கிப் போயிருக்கிறது.  இவருடைய கண்ணாடி மாளிகை, வீடுகள்தோறும் வெறுப்பின் காரணமாகி இருக்கிறது.  அவர்களுக்கு ஒருவேளை கருப்பு என்ற சொல் பிடிக்கலாம்.  ஒவ்வொருவருக்கும் கடந்த காலம் என்று உண்டல்லவா?  கருப்புப் பொருட்களுடன் அவர்களுக்கு என்ன பழைய உறவு இருந்தது? 

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இப்படிப்பட்ட அனைத்து நண்பர்களிடமும், நான் கண்டிப்பாக ஒன்றைக் கூறுகிறேன்.  நீங்கள் எத்தனை தான் உலகை ஏமாற்றினாலும்.  நீங்கள், எத்தனை தான் உலகை ஏமாற்றினாலும்.  கண்ணாடியைப் பார்த்துவிட்டால், அப்போது உங்கள் உண்மையை, எங்கே மறைப்பீர்கள்?   காங்கிரஸாகட்டும், டிஎம்சியாகட்டும், டிஎம்கேயாகட்டும், இடதுசாரியாகட்டும், இவர்கள் பல பத்தாண்டுகளாக, மத்தியிலே அதிகாரத்திலே இருந்திருக்கிறாரகள்.  அதிகாரத்தில் பங்கு வகித்திருக்கிறார்கள்.  

மாநிலங்களிலும் கூட ஆட்சி நடத்த அவர்களுக்குச் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன.  ஆனால், அவர்களுடைய அடையாளம் என்னவாக இருந்தது?  இன்று ஒப்பந்தம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம், நம்மால் பெருமையாகச் சொல்ல முடிகிறது.  அப்போது ஒப்பந்தம் பற்றிப் பேசினால் போஃபோர்ஸ் ஒப்பந்தம் என்றானது.  இந்த டீல்கள் தாம் நடந்தன.  அவர்கள் தங்கள் பைகளை ரொப்பிக் கொள்ளும் வேலையைச் செய்தார்கள்.  குடிமக்களின் வாழ்க்கையிலே மாற்றங்கள் ஏற்படுத்துவது, அவர்களின் முதன்மையாக இருக்கவில்லை. 

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, நேற்று அவையில் நடந்த சம்பவம், இதே அவையின் ஒரு மதிப்பிற்குரிய உறுப்பினர், காங்கிரசினுடைய, வஞ்சகமான புத்தியுடைய…. அருவருப்பான குணமுடைய, இளவரசன், அவரை துரோகி என்று சொல்லி விட்டாரே!?  அகங்காரம் எந்த அளவுக்கு, வானை எட்டும் வகையில் வளர்ந்திருக்கிறது!!  மேலும், காங்கிரசை விட்டு எத்தனையோர் பேர் வெளியேறி இருக்கின்றார்கள்.   அது எத்தனை துண்டுகள் ஆகியிருக்கிறது?  பலர் வேறு கட்சிகளுக்குச் சென்றிருக்கிறார்கள். 

மற்ற யாரையும் துரோகி என்று கூறியிருக்க மாட்டாரே?   ஆனால், நேற்று அவரை ஏன் துரோகி என்றார் தெரியுமா?  ஏனென்றால் அவர் சீக்கியர்.  இது சீக்கியர்களுக்கு அவமானம்.  இது குருமார்களின் அவமானம்.  மேலும் காங்கிரசினுடைய, ஒவ்வொரு அணுவிலும் சீக்கியர் மீதான வெறுப்பு இருக்கிறதே, அதனுடைய ஒரு….. வெளிப்பாடு தான்.  அவர் இதே அவையின் மதிப்பிற்குரிய உறுப்பினர்.   ஆனால் இளவரசுக்கோ, கொஞ்சமும் பொருட்டல்ல.  இல்லையென்றால் இன்று எழுந்து நின்று கூறியிருக்கலாமே. 

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

நேற்று நடந்தவை, இதே அவையினுடைய, உறுப்பினருடைய கண்ணியத்துக்கு, உகந்ததாக இல்லை, அதற்கு வருந்துகிறேன், என்று ஓரிரு வார்த்தைகள் சொல்லியிருக்கலாமே!!  ஆனால், சீக்கியர்களுக்கு எதிராக அவர் மனதில் படிந்திருக்கும் வெறுப்புணர்வு, இதன் காரணமாகவே, அப்படி நடந்து கொண்டார்.  மேலும் அவருடைய குடும்பம், தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர் உறுப்பினர்.  அவர் தன்னுடைய அரசியல் கொள்கைகளை மாற்றிக் கொண்டார் என்பதற்காக துரோகி என்றா அழைப்பீர்கள்?  மேலும் இந்த துரோகி என்ற சொல் லேசான சொல் அல்ல.  என்னுடைய நாட்டுமக்களை ஒருவர் துரோகி என்று அழைப்பதை, எப்படி தேசம் பொறுத்துக் கொள்ள முடியும்?  அதுவும் அவர் ஒரு சீக்கியர் என்பதால் துரோகி  என்று அழைப்பீர்களா?  மிகவும் அவமானகரமான விஷயம்.  இப்படிப்பட்டவர்கள், காங்கிரசை முட்டுசந்தில் தானே கொண்டு நிறுத்துவார்கள் ?

Related articles

Recent articles

spot_img