T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
சூப்பர் 8 ஆட்டங்கள் 25.02.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

            சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கின்றன. 24.02.2026 அன்று பல்லெகலேயில் நடந்த பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை (20 ஓவர்களில் 164/9) இங்கிலாந்து அணி (19.1 ஓவர்களில் 166/8) 2 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 25.02.2026 அன்று கொழும்புவில் நடைபெற்ற மற்றொரு குரூப் 2 ஆட்டத்தில் நியூசிலாந்து, இலங்கஈ அணிகள் விளையாடின. இதில் நியூசிலாந்து அணி (20 ஓவர்களில் 168/7) இலங்கை அணியை (20 ஓவர்களில் 107/8) 61 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று (26.02.2026) இரண்டு குரூப் 1 ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையே நடந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியை (20 ஓவர்களில் 176/8) தென் ஆப்பிரிக்க அணி (16.1 ஓவர்களில் 177/1) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றாது. முதலில் ஆடிய மே.இ. தீவுகள் அணி 90/7 என்ற நிலையில் திணறிக்கொண்டிருந்தபோது அந்த அணியின் ஜேசன் ஹோல்டர் (49 ரன்), ரோமாரியோ ஷெப்பர்ட் (52 ரன்) இருவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் தென் ஆப்பிரிக்க அணியின் எய்டன் மர்கரம் (82 ரன்), க்விண்டன் டி காக் (47 ரன்) மற்றும் ரியன் ரிக்கிள்டன் (45 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி வெற்றியைத் தேடித்தந்தனர்.

          இரண்டாவது ஆட்டம் சென்னையில் இந்திய, ஜிம்பாபே அணிகளுக்கிடையே நடந்தது. பூவா தலையா வென்ற ஜிம்பாபே அணி பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாட வந்த இந்திய அணியின் சஞ்சு சாம்சன் (15 பந்துகளில் 24 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), அபிஷேக் ஷர்மா (30 பந்துகளில் 55 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்), இஷான் கிஷன் (24 பந்துகளில் 38 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் (13 பந்துகளில் 334 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (23 பந்துகளில் 50 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் திலக் வர்மா (16 பந்துகளில் 44 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) ஆகிய அனைவரும் மிகச்சிறப்பாக விளையாடினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 256 ரன் எடுத்தது.

          இரண்டாவதாக ஆடவந்த ஜிம்பாபே அணியின் தொடக்க வீரர் பிரியன் பென்னட் ஆட்டமிழக்காமல் 97 ரன் அடித்தார். பிறர் சரியாக ஆடவில்லை. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கட்டுகள் எடுத்தார். ஆட்ட நாயகனாக ஹார்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார்.

          அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம் கொழும்புவில் இரவு 0700 மணிக்கு நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories