இந்திய அணி குரூப் போட்டோ – அனுஷ்கா சர்மாவுக்கு என்ன வேலை? என நெட்டிசன்கள் கிண்டல்

விளையாட்டு

02 Aug 09 Anusha sharma - 2026இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்திய அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று இந்திய கிரிக்கெட் அணி, தூதரகத்திற்கு சென்றது.

இறுதியாக ஒட்டுமொத்த அணியும், தூதரக கட்டிடத்திற்கு முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டது. இந்த புகைப்படத்தில் பாலிவுட் நடிகையும் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவும் போஸ் கொடுத்தார்.

இந்த போட்டோவை கண்ட ட்விட்டர் வாசிகள், அனுஷ்கா சர்மா என்ன இந்திய அணியில் ஒருவரா? அவர் ஏன் இந்திய அணியுடன் புகைப்படத்திற்கு போஸ் தருகிறார். பிசிசிஐ இதனை எப்படி அனுமதித்தது? மற்ற வீரர்களின் மனைவிகள் எங்கே? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே வீரர்கள் தங்களது மனைவி, தோழிகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதை குறைத்து, போட்டிகளில் கவனத்தை செலுத்துமாறு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.