வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், 224 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன் குவித்தது. 0 ஓவரில் 378 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவரிலேயே 153 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 224 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.


