நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மாவின் படைத்த சாதனைகள்

விளையாட்டு

03 Oct30 Rohit sharma - 2026

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தனது 21வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 21-வது சதத்தை கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஹசிம் அம்லா 116 இன்னிங்சிலும், விராட் கோலி 138 இன்னிங்சிலும், ஏபி டி வில்லியர்ஸ் 183 இன்னிங்சிலும் 21 சதங்கள் அடித்து முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

ரோகித் சர்மா இந்த சதத்துடன் 186 இன்னிங்ஸ் உடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 200 இன்னிங்ஸ் உடன் 5-வது இடத்தில் உள்ளார்.

இதுதவிர தொடக்க வீரராக களமிறங்கி 19 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம்பிடித்துள்ளார். மேலும் 2013-ம் ஆண்டு ஜனவரிக்குப் பின் அதிக சதங்கள் விளாசியர் பட்டியலில் 2-வது இடம்பிடித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.