ரியல் மாட்ரிட் அணி பயிற்சியாளர் ஜுலன் லோபெடிகுயி நீக்கம்

விளையாட்டு

02 Oct31 foot ball - 2026

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஜுலன் லோபெடிகுயி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்த ரியல் மாட்ரிட் அணி, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜுவென்டஸ் அணிக்கு மாறிய பிறகு திணறி வருகிறது. கடந்த ஜூன் மாதம் பயிற்சியாளர் ஜினடின் ஜிடேன் விலகியது மேலும் பின்னடைவை கொடுத்தது. ஜிடேனுக்கு பதிலாக ஜுலன் லோபெடிகுயி (52 வயது) பதவியேற்ற பின்னர் விளையாடிய 6 லா லிகா ஆட்டங்களில், ரியல் மாட்ரிட் 5 தோல்விகளை சந்தித்தது.

கடைசியாக பார்சிலோனா அணியுடன் நடந்த எல் கிளாசிகோ மோதலில் 1-5 என்ற கோல் கணக்கில் பரிதாபமாகத் தோல்வியடைந்த நிலையில், பயிற்சியாளர் லோபெடிகுயி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். முன்னாள் வீரர் சான்டியாகோ சோலரி தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரியல் மாட்ரிட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.