ஐபிஎல்: தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் அணிகளில் இருந்து விடுவிப்பு

ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), இந்தியாவின் தினேஷ் கார்த்திக், வெஸ்ட் இண்டீசின் டேரன் சேமி (இருவரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்), இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், இந்தியாவின் இஷாந்த் ஷர்மா (மூன்று பேரும் ஐதராபாத் சன் ரைசர்ஸ்), இந்தியாவின் பிரக்யான் ஓஜா, ஆஸ்திரேலியாவின் ஹாஸ்லேவுட், ஆரோன் பிஞ்ச் (மும்பை இந்தியன்ஸ்) உள்ளிட்டோரும் தங்களது அணி நிர்வாகங்களால் விலக்கப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில் பெங்களூரு அணி 14 வீரர்களையும், டெல்லி, மும்பை, கொல்கத்தா தலா 10 வீரர்களையும், பஞ்சாப், ஐதராபாத் தலா 8 வீரர்களையும் விடுவித்துள்ளது. இவர்கள் பிப்ரவரி மாதம் நடக்கும் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள். விராட் கோலி (பெங்களூரு), கம்பீர் (கொல்கத்தா), ரோகித் சர்மா (மும்பை), வார்னர் (ஐதராபாத்), டுமினி (டெல்லி), மேக்ஸ்வெல் (பஞ்சாப்) உள்ளிட்டோர் தங்களது அணிகளில் தொடருகிறார்கள்.